ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் நவ.,25ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முதல்வர் அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகியோர் தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டனர். இதையடுத்து தேர்தல் பிரசாரத்தில், 'ராகுல் போன்ற தலைவர்கள் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தனர்' என கார்கே பேசினார்.
ராஜிவ் பெயரை பயன்படுத்த வேண்டிய இடத்தில் ராகுல் பெயரை பயன்படுத்தியதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அருகில் இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் மல்லிகார்ஜுன கார்கேயிடம் தவறாக பேசியது குறித்து தெரிவித்தார்.
மன்னிப்பு கேட்ட கார்கே
இதையடுத்து “நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ராகுல் என்று நான் தவறாக பேசிவிட்டேன். தேசத்தின் ஒற்றுமைக்காக ராஜிவ் தன் உயிரை தியாகம் செய்தார். காங்கிரசில் தேசத்திற்காக உயிரைக் கொடுத்த தலைவர்கள் உள்ளனர். பாஜ., வில் உயிரைப் பறிக்கும் தலைவர்கள் உள்ளனர் என கார்கே பேசினார்.
வாசகர் கருத்து (32)
காங்கிரஸின் இன்றைய நிலைமை.. வயதுமூப்பால் உளறுவது .. வயது ஆகியும் உளறுவது .. எதாவது உளறவேண்டுமே என்று உளறுவது .. உளறுவதே வழக்கம் என்று உளறுவது .. உளறலை தவிர ஒன்றும் தெரியாததால் உளறுவது .. மக்களே நீங்கள் சொல்லுங்க யார் யார் எது எது என்று..
வயது ஆகிவிட்டது. என்ன பேசுகிறோம் என்று தெரியவில்லை. பேசாம அரசியலுக்கு முழுக்குபோட்டுவிட்டு, சிவனே என்று வீட்டில் உட்காரவேண்டும். ஆனால், பதவி ஆசை அப்படி செய்ய மறுக்கிறது.
Kharge ji mentioned about martyrdom of Rajiv Gandhi in Rajasthan not in Tamilnadu so many may know the truth behind Rajiv murder . If Kharge ji said in Tamilnadu , then whole lot of great Tamil politicians will acknowledge it . A whole lot of media will give prominence in their reporting . Still Congress considers that people are ignorant
Vayadhu mooppu karanamaka vara vara,,,oivar ularal,,athikamakiradhu. Pesamal veetile ,pathaviyai,Rajinama seythuvittu vozhvu edungal Ippa National herald kesulu veru ungala izhuthu vittuttu soniaji thappithu vittanga,,,pavam sir,,neenga?
ஸ்லிப் ஆப் டங்.... யாருக்கு வேண்டுமானாலும் வரலாம், ஆனால் தேசத்தை ஆளவேண்டும் என்ற கனவில் இருக்கும் பெரிய அரசியல் தலைவர்களுக்கு வரக்கூடாது. வாய் புளித்ததோ , மாங்காய் புளித்ததோ என்று நம்ம பிரதமரை பற்றி கூட ஏடா கூடமாக சேற்றை இறைக்கிறார்கள்