Load Image
Advertisement

மீனவர்களின் பிரச்னைகளை முடித்து கொடுப்பேன்: கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவாதம்

 I will solve the problems of fishermen: Governor RN Ravi guarantees   மீனவர்களின் பிரச்னைகளை முடித்து கொடுப்பேன்: கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவாதம்
ADVERTISEMENT

தூத்துக்குடி: மீனவர்களின் பிரச்னைகள் அனைத்தையும் முடித்துக் கொடுப்பேன் என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உறுதி அளித்துள்ளார்.

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் நடந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்என்.ரவி பேசியதாவது: ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., போன்ற உயர் பதவிகளுக்கு மீனவர்கள் வர வேண்டும். கடலோர காவல் படையில் மீனவ இளைஞர்களை சேர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இரண்டு மாதத்திற்கு முன்பு மீனவர்களிடம் அவர்கள் பிரச்னை குறித்து கேட்டறிந்தேன். மீனவர்களின் குறையை மத்திய மாநில அரசுகளிடம் சமர்ப்பித்தேன். நான் உங்களுக்கு (மீனவர்கள்) நம்பிக்கை தெரிவிக்கின்றேன். மீனவர்களின் பிரச்னைகள் அனைத்தையும் நான் முடித்துக் கொடுப்பேன்.

மீனவர்கள், நாட்டை பாதுகாப்பதிலும், நாட்டின் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
மீனவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து மீன் பிடிக்க செல்கின்றனர். மீனவர்களுக்கு நல்ல ஆரோக்கியம், கிடைக்க கடவுள் ஆசீர்வதிக்க வேண்டும். தேசத்தின் பாதுகாப்பில் மீனவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

நமது இந்திய தேசம் பெரிய கடல் எல்லையை கொண்டதாக இருக்கிறது. மரைன் போலீசில் மீனவ இளைஞர்கள் பங்கு பெற வேண்டும். ஏனென்றால் கடலை பாதுகாப்பது அனைவராலும் முடியாது. கூடிய விரைவில் கடல் பாதுகாப்புப் படையில் மீனவ இளைஞர்களை அதிகம் சேர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். மீனவ சமுதாயம் பின்னடைவில் இருக்கிறது. மீனவர்களுக்கு இன்னும் பல திட்டங்கள் கொண்டு வரப்படும். இவ்வாறு கவர்னர் பேசினார்.


வாசகர் கருத்து (25)

  • அப்புசாமி -

    அடுத்த தடவை மீனவர்கள் கைதானால் கெவுனரே ஜாமீன்ல எடுப்பாரோ?

  • அப்புசாமி -

    மீனவர்களுக்கு தினமும் 15 கிலோ மீன் வாங்கி குடுக்கலாம்.

  • venugopal s -

    இவர் ஆளுநர் வேலையைத் தவிர மற்ற எல்லா வேலைகளையும் பார்க்கிறார்!

    • ராஜா -

      ஆமாம். விவசாயிகள் மீது குண்டாஸ் போட்ட இந்த புலிகேசி ஆட்சியை இன்னும் கலைக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றார்.

    • சுந்தர்ராஜன்,திருப்பத்தூர் -

      உன்னை போன்ற அறிவாலய அடிமைக்கு திமுகவிற்கு முட்டுக் கொடுப்பதை தவிர எப்படி வேறு வேலை இல்லையோ அது மாதிரிதான்.

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    கடலோர காவல் படையில் மீனவ இளைஞர்களை சேர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது சிறப்பான முயற்சி.

  • v j antony - coimbatore,இந்தியா

    இரு நாட்டு மீனவர்களை பேசவைத்து சுமுகமாக மீன்பிடி தொழில் செய்ய நடவடிக்கை எடுப்பதே சிறந்த முடிவாக இருக்கும் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்