Load Image
Advertisement

‛‛பயங்கரவாதம், வன்முறைக்கு எதிராக நிற்கிறோம்: ஐ.நாவின் இந்திய தூதர் பேச்சு

Israel Hamas War, ruchira kamboj: Stand against violence: Speech by Indian Ambassador to UN   ‛‛பயங்கரவாதம், வன்முறைக்கு எதிராக நிற்கிறோம்: ஐ.நாவின் இந்திய தூதர் பேச்சு
ADVERTISEMENT
வாஷிங்டன்: ‛‛பயங்கரவாதம் எந்தவிதத்தில் இருந்தாலும் அதனை உறுதியாக எதிர்க்கிறோம். வன்முறைக்கு எதிராகவும் நிற்கிறோம் '' என ஐநாவின் இந்திய தூதர் ருசிரா கம்போஜ் பேசினார்.

இஸ்ரேல் - ஹமாஸ் போர் ஒரு மாதத்திற்கு மேலாக தொடர்ந்து வருகிறது. இது தொடர்பாக ஐ.நா., பொது அவையின் கூட்டத்தில் நிரந்தர இந்திய தூதர் ருசிரா கம்போஜ் பேசியதாவது: சர்வதேச கூட்டமைப்புகளால் மேற்கொள்ளப்படும் போர் வீரியத்தைத் தணிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா வரவேற்கிறது. வாழ்வாதார தேவைகள் பாலஸ்தீன மக்களுக்கு சென்று சேர வேண்டும்.

பயங்கரவாதம் எந்தவிதத்தில் இருந்தாலும் அதனை உறுதியாக எதிர்க்கிறோம். வன்முறைக்கு எதிராகவும் நிற்கிறோம். மனிதநேய அடிப்படையிலான தற்காலிக போர் நிறுத்த முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவளிக்கும். வாழ்வாதார பொருள்கள் கிடைக்கச் செய்வதும் பிணைக்கைதிகள் நிபந்தனையின்றி விடுவிக்கப்படவும் வேண்டும். அமைதி உருவாக அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


வாசகர் கருத்து (2)

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    பேசினால் மட்டும் போதாது. செயலில் காட்டவேண்டும். தாமதிக்காதீர்கள்.

  • Nachiar - toronto,கனடா

    அப்படியானால் எப்போ ஹமாஸ் இயக்கத்தை தடை செய்யப்பட்ட இயக்கமா செய்யப் போகிறீர்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்