Load Image
Advertisement

பழங்குடியினரின் உரிமைகளை காங்., பாதுகாக்கும்; ராகுல்

Why is BJP spreading hatred in the country?: Rahul asks   பழங்குடியினரின் உரிமைகளை காங்., பாதுகாக்கும்; ராகுல்
ADVERTISEMENT
ஜெய்ப்பூர்:பழங்குடியினரின் உரிமைகளை காங்கிரஸ் பாதுகாக்கும் என ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்.,எம்.பி ராகுல் பேசினார்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது நாட்டின் 'எக்ஸ்ரே'. அதனால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது மிகவும் அவசியம்.பழங்குடியினரின் உரிமைகளை காங்கிரஸ் பாதுகாக்கும்.

பிரதமர் மோடி தன்னை ஓபிசி என்று கூறுகிறார். ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றி நான் பேசும்போது, இந்தியாவில் ஒரே ஜாதிதான் இருக்கிறது. நாட்டில் ஏழைகள் மட்டுமே ஜாதி என்று மோடி கூறுகிறார். ஆனால் கோடீஸ்வரர்கள் என்று இன்னொரு ஜாதி இருக்கிறது. அதில் அம்பானி, அதானி உள்ளனர். மக்கள் கவனத்தை திசை திருப்புவது பாஜ.,வின் வேலை.

நாட்டில் பாஜ., ஏன் வெறுப்பை பரப்புகிறது?. நான் உங்களுக்கு இரண்டு விஷயங்களை சொல்ல விரும்புகிறேன். வெறுப்பை பரப்ப காரணம் வேலையின்மை மற்றும் பணவீக்கம். இந்த இரண்டு விஷயங்களிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப பாஜ., வெறுப்பை பரப்புகிறது.

இந்தியாவின் செல்வம் கோடீஸ்வரர்களின் கைகளிலேயே இருக்க வேண்டும். தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அதைப் பற்றி கேள்வி எழுப்பக்கூடாது என்றும் பாஜ., விரும்புகிறது. இவ்வாறு ராகுல் பேசினார்.





உலக கோப்பையில் தோற்றது ஏன்

பிரசாரத்தில் ராகுல் பேசுகையில், ''உலக கோப்பையில் நம் வீரர்கள் வெற்றி பெற்றிருப்பார்கள், அவர்கள் நன்றாக விளையாடினார்கள். ஆனால் ஒரு ராசியில்லாதவரால் நாம் தோற்றோம்'' எனப் பேசினார். பிரதமர் மோடி உலக கோப்பை பைனலை பார்க்க சென்றதை மறைமுகமாக குறிப்பிட்டு ராகுல் பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.



வாசகர் கருத்து (35)

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    அதைத்தான் அன்றே உங்கள் பாட்டனார் நேரு அவர்கள் செய்து காட்டி இருக்கிறாரே. இந்த செய்தியை படிக்கவும்: நேருவின் 'முதல் பழங்குடி மனைவி' மரணம் என்று ஒரு செய்தி இருக்கிறது. நான் இந்த செய்தியை படித்துவிட்டு சிலிர்த்துபோனேன், காங்கிரஸ் எப்படி அந்த காலத்திலேயே பழங்குடியினரின் உரிமைகளை 'பாதுகாத்தார்கள்' என்று.

  • குமரி குருவி -

    பழங்குடி மக்கள் பிரச்னைதீர்க்கப்படும்...உன் பிரச்னைதான் பெரிய பிரச்னையாகஉள்ளது..

  • Anand - chennai,இந்தியா

    தயவு செய்து ... வே ண்டாம்

  • DVRR - Kolkata,இந்தியா

    நேருவின் 'முதல் பழங்குடி மனைவி' மரணம்: ஜார்க்கண்டில் வினோதம்???ஆகவே பழங்குடியினரின் உரிமைகளை காங்., பாதுகாக்கும் ராகுல் என்று அர்த்தம் கொள்ளவேண்டும்

  • Saai Sundharamurthy AVK -

    இதே பேச்சு அடுத்த ஐந்து ஆண்டுகள் வரை பேச மாட்டார். அதற்கு பிறகு வரும் தேர்தல் பிரச்சாரத்தில் பேசுவார். 😊😊

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்