ஆமதாபாத்: உலக கோப்பை கிரிக்கெட் பைனலில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதனால் மனமுடைந்த இந்திய வீரர்களை நேரில் சந்தித்த பிரதமர் மோடி, ஆறுதல் வார்த்தை கூறி தேற்றினார் பிரதமர் மோடி.
இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகிய இருவரின் கையை பிடித்து, 'தோல்வி ஏற்பட்டாலும் உங்களின் திறமையும், மனஉறுதியும் மிகவும் பாராட்டத்தக்கது. உற்சாகத்துடன் விளையாடி தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளீர்கள்' என்றார். பின் அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டையும் சந்தித்தார்.

ஒவ்வொரு வீரரையும் கைகொடுத்து அவர்களின் பங்களிப்பு மற்றும் திறமையை பாராட்டினார். உலக கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்தி அசத்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியை கட்டித்தழுவி ஆறுதல் கூறினார். மோடியுடன் மத்திய அமைச்சர் அமித்ஷாவும் உடனிருந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
வாசகர் கருத்து (15)
2.7 கோடி மக்கள்தொகை கொண்ட ஆஸ்திரேலியா 11 திறமையான வீரர்களை உருவாக்கும்போது,150 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியா அதிக தசை வலிமை மற்றும் ஆற்றல் கொண்ட 11 வீரர்களை உருவாக்க முடியாதா என்ன? 150 மீட்டர் தூரம் கூட சிக்ஸ் அடிக்கமுடியும் இந்தியர்களால்.
“நினைச்சது ஒண்ணு... நடந்தது ஒண்ணு.... இப்ப சோகமா இருக்குதே அய்யாக் கண்ணு”...?
கிரிக்கெட்டில் நமது வீரர்கள் தோற்றத்திற்கு காரணம் நமது ஆட்கள்தான், ரோஹித்தின் நிர்வாக போக்கும் சரியில்லை, மூன்று முக்கிய ஸ்லிப்களை தவற விட்டோம், ஸ்பின் பௌலர் ரவிச்சந்திரன் அஸ்வினை ஏன் இறக்கவில்லை, வேக பந்து வீச்சாளர்களை கொடுத்து அதிக ரன்களை கொடுத்தோம்,
1). பிரதமரின் செயல் கண்டிப்பாக பாரட்டுதலுக்கு உரியது மற்றும் வரவேற்கத்தக்கது.2). அதேசமயம் ரோகித் மற்றும் சுப்மன் கில் சற்று பொருப்பாக விளையாடி இருக்கலாம். 350 ரன்கள் அடிக்க வேண்டிய ஆடுகளம் அது.3). ஆறாவது பவுலர் ஆப்ஷன் இல்லாதது ஒரு குறையே.அஸ்வன் அல்லது ஹார்த்திக பாண்டியா இல்லாதது நிச்சயமாக ஒரு இழப்புதான்.4). சுருக்கமாக சொன்னால் இந்திய அணி உணர்ச்சி பூர்வமாக விளையாடியது ஆனால் ஆஸ்திரேலியா அணி பக்கா strategically நல்ல பிளானை எக்செக்யூடிவ் பண்ணி ஆடி வென்றார்கள்.5). எமோஷனல்லாக விளையாடுவதை இந்திய அணி இனிமேல் தவிர்க்க வேண்டும்.6). T20 மேட்சுக்கு ஹார்த்தி பாண்டியாவை கேப்டனாகவும், One Day Matchக்கு ரோஹித்யை கேப்டனாகவும் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியை கேப்டனாகவும் நமது கிரிக்கெட் போர்ட் நியமிக்க வேண்டும். அப்பொழதுதான் ஒர்க் லோட் வேலை பளு மற்றும் மன இறுக்கம் குறையும்.
இதயம் துடிப்பதால் தான் இந்த தோல்வி.....இதயம் துடித்துக்கொண்டுள்ளது சாதிக்க.