Load Image
Advertisement

பக்தியால் பரவசமூட்டும் சிவாங்கா தெம்பு நிகழ்ச்சி

Sivanga Thempu is a devotionally enthralling performance   பக்தியால் பரவசமூட்டும் சிவாங்கா தெம்பு நிகழ்ச்சி
ADVERTISEMENT
பஜனை மற்றும் அர்ப்பணிப்புகள் மூலம் சிவ பக்தியில் திளைத்திட செய்யும் 'சிவாங்கா தெம்பு' நிகழ்ச்சி ஈரோட்டில் நேற்று மாலை (நவ.19) விமர்சையாக நடைபெற்றது.

தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழாவை ஈரோடு மேயர் திருமதி. நாகரத்தினம் அவர்கள் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். சுதா மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் தனபாக்கியம், ஆடிட்டர் திரு. ரவீந்திரன், திருமதி. கெளரி ரவீந்திரன், ஒயாசிஸ் ஹோட்டலின் உரிமையாளர் திரு.சிவசங்கரன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
Latest Tamil News
சத்தி மெயின் ரோட்டில் உள்ள மகேஸ்வரி மஹாலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான ஈஷா தன்னார்வலர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். லிங்க பைரவி தேவி திவ்ய பூஜையுடன் விழா அற்புதமாக தொடங்கியது. இதை தொடர்ந்து சிவனின் பல்வேறு நாமங்களை பாடும் இசையுடன் சேர்ந்த பஜனை நடைபெற்றது. பின்னர், தொன்மையான பாரம்பரிய இசை வாத்தியமான கைலாய வாத்தியம் இசைக்கப்பட்டது. இனிமையான இசையும், சக்திமிக்க மந்திர உச்சாடனைகளும் ஒன்று சேர்ந்து பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
Latest Tamil News
தென் கயிலாய பக்தி பேரவை என்பது கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு ஆன்மீக அமைப்பாகும். வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்களை அழைத்து செல்வது, அம்மலையில் தூய்மைப் பணியை மேற்கொள்வது, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தொன்மையான கோவில்களில் உழவாரப் பணிகளை மேற்கொள்வது போன்ற பணிகளை இந்த அமைப்பு செய்து வருகிறது. அத்துடன் பெரும்பாலும் தர்க்க ரீதியாக மட்டுமே வாழ்க்கையை உணரும் மக்கள் பஜனை மற்றும் அர்ப்பணிப்புகள் மூலம் பக்தியின் சுவையை சுவைத்திட செய்வதற்காக 'சிவாங்கா தெம்பு' என்னும் நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறது.
Latest Tamil News


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement