ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் நவ.,25ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முதல்வர் அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகியோர் தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டனர்.
தேர்தல் வாக்குறுயில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
* பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ10,000 வழங்குவோம்.
* சமையல் காஸ் சிலிண்டர் ரூ500க்கு வழங்கப்படும்.
* மாட்டு சாணம் 1 கிலோ ரூ. 2க்கு கொள்முதல் செய்யப்படும்.
* அரசு கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும்.
* இயற்கை பேரிடர் இழப்புகளுக்கு ரூ15 லட்சம் வரை இலவச காப்பீடு திட்டம்.
* அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்
* அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி அறிமுகம்.
* மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
காங்., கோட்டை
நிகழ்ச்சியில் காங்., தலைவர் கார்கே பேசியதாவது: ‛‛ராஜஸ்தான் எப்போதும் காங்கிரசின் கோட்டையாக இருந்து வருகிறது. நாங்கள் எப்பொழுதும் நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை அளிக்கிறோம்'' என்றார்.
தனிநபர் வருவானம்
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில், "ராஜஸ்தானில் தனிநபர் வருமானம் 46.48 சதவீதம் அதிகரித்துள்ளது. தனிநபர் வருவாயில் முதலிடத்தை அடைவதே எங்கள் கனவாகும். இது கடந்த பத்தாண்டுகளை ஓப்பிடும் போது மிக அதிகம்'' எனக் கூறினார்.
வாசகர் கருத்து (4)
ஒரே வரியில் இப்படி சொல்லியிருக்கலாமே - யாரும் வேலைக்கு செல்லவேண்டியதில்லை உங்கள் வீடு தேடி உணவு உடை அனைத்து பொருட்களும் உங்கள் வீட்டுக்கே வந்து விடும் என்று???
இலவசங்களையும் இலவச வாக்குறுதிகளையும் ஓட்டுக்கு பணம் கொடுத்தும் தான் தேர்தலை சந்தித்துவெற்றி பெற வேண்டியநிலையில் எல்லா மாநிலங்களும் உள்ளன. இந்த சூழலில் நேர்மையான ஆட்சியை இந்தியாவில் காணமுடியாது.
ஏன் கஜானாவையே திறந்து விட்டு விடுவோம் என்று கூறுங்கள். வருமானவரி கட்ட வேண்டாம், பொருட்கள் வாங்கும் போது அதற்க்கான வரி கட்ட வேண்டாம். இனி எந்த வித நேர்முக மற்றும் மறைமுக வரிகளே கட்டவே வேண்டாம் என்று கூறுங்கள். இனி அலுவலகத்திற்கு காலையோ அல்லது மாலையோ மட்டும் வந்தால் போதும். சம்பளம் இனி மாதம் இருமுறை வழங்கப்படும், தனியார் நிறுவனம் போன்று கேட்டவர்க்கு கேட்ட சம்பளம் வழங்கப்படும். இதற்க்கு மாற்றாக என்ன நடக்கும் ? சாலைகள் போட வேண்டாம், மின் விநியோகம் காலி, காய்கறி விலை விண்ணைத் தொடும், உரம் மற்றும் இதர விவசாய பொருட்கள் மிகுந்த தட்டுப்பாடுடன் இருக்கும். அரசு கஜானாவில் காசு இருக்காது. கடன் சுமை அதிகமாகும். சூப்பராக பஞ்ச பரதேசி நாடாக மாற்று விடலாம். ஏற்கனவே நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டம் விவசாயத்தை அழித்துக் கொண்டு வருகிறது. அது போல எதிர்கால வளமான நாடாக மாற்றுவதற்கு பதிலாக, மீண்டும் ஏழை நாடாக, முன்னேற்றம் இல்லாத நாடாக மாற்றி விடும்.
காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போது நடத்தாத ஜாதிவாரி கணக்கெடுப்பு தேர்தல் அறிக்கையாக வருவதின் மர்மம் என்ன? பாஜக நாடு முழுவதும் இந்துக்களை ஒருங்கிணைக்கிறது. இந்த வயித்தெரிச்சலிலில் சீன கைக்கூலி காங்கிரஸ், பிரித்தாளும் சூழ்ச்சியாக ஒற்றுமையாக இருக்கும் இந்துக்களை ஜாதிவாரியாக பிரித்து, பாஜகவுக்கு வரும் தேர்தல்களில் நெருக்கடி கொடுப்பதற்காகவே இந்த கணக்கெடுப்போ?