Load Image
Advertisement

பரவும் டீப் பேக் வீடியோக்கள்: அவசர ஆலோசனை நடத்த மத்திய அரசு முடிவு

Deep fake videos going viral: Central government decides to hold emergency consultation   பரவும் டீப் பேக் வீடியோக்கள்: அவசர ஆலோசனை நடத்த மத்திய அரசு முடிவு
ADVERTISEMENT
புதுடில்லி: ‛டீப் பேக்' வீடியோக்கள் விவகாரம் தொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை நவ.,24ல் அவசர ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளது. ஆலோசனைக் கூட்டத்தில் மெட்டா, கூகுள் நிறுவன அதிகாரிகள் பங்கேற்க அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஒருவரது ஆபாசமான வீடியோவில், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை மட்டும் 'ஏஐ' எனப்படும் செயற்கை தொழில்நுட்பம் மூலம், 'மார்பிங்' செய்து சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. இதற்கு பல சினிமா பிரபலங்களும் கண்டனங்களைத் தெரிவித்தனர். வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகைகள் உள்ளிட்ட சிலரின் முகங்களை போலியாக சித்தரித்து பரப்பப்படும் 'டீப் பேக்' வீடியோக்கள் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்து இருந்தார். 'தொழில்நுட்பம் பொறுப்புடன் கையாளப்பட வேண்டும் எனவும், ஊடகங்கள் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்' என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

இந்நிலையில் ‛டீப் பேக்' வீடியோக்கள் விவகாரம் தொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை நவ.,24ல் அவசர ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளது. ஆலோசனைக் கூட்டத்தில் மெட்டா, கூகுள் நிறுவன அதிகாரிகள் பங்கேற்க அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் பொது பயன்பாட்டுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.


வாசகர் கருத்து (8)

  • அப்புசாமி -

    நம்மாளுங்களுக்கு இன்னும் சவுகரியமாப் போச்சு. இது என்னோட முகம் இல்ல. அது என்னோட வாய்ஸ் இல்லன்னு சொல்லி தப்பிச்சுக்கலாம்.

  • அப்புசாமி -

    மெட்டாவும், கூகுளும் பின் தங்கி விட்டார்கள். ஓப்பன் ஏ.ஐ , மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் இதில் முன்னேறி வருகின்றன. போகிற போக்கில் ஜெர்மனி.மாதிரி டைப்ராட்டருக்கு மாறிடுவாங்க.

  • Siva Subramaniam - Coimbatore,இந்தியா

    ஆரம்பமே இப்படி என்றால் அடித்தது எப்படியோ

  • Raj - Madurai,இந்தியா

    தமிழ் ரொம்ப ரொம்ப தொன்மையான மொழிதான், இருந்தாலும் இந்த 'டீப் பேக்' வார்த்தைய அடைப்புகுறில ஆங்கிலத்திலயும் எழுதிருக்கலாம். எப்பிடி படிக்கனும்னே புரியல்ல.

  • Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்

    தியாகராஜன் காலத்தில் இருந்தே இதே மாதிரி வீடியோ வந்தது அப்போது ஒருத்தரும் நடவடிக்கை எடுக்கல

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்