Load Image
Advertisement

பி.சுசீலா பாடலைப் பாடி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்: ஜெயலலிதாவுக்கும் பாராட்டு

Honorary doctorate awarded to playback singer P. Susheela: Chief Minister Stalin பி.சுசீலா பாடலைப் பாடி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்: ஜெயலலிதாவுக்கும் பாராட்டு
ADVERTISEMENT
சென்னை: தென்னகத் திரையிசையின் தேன்மதுரக் குரல் “கானசரஸ்வதி” பி. சுசீலாவிற்கு இசை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் ஸ்டாலின் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட பன்மொழிகளில் ஏறக்குறைய 40,000க்கும் அதிகமான பாடல்களை பாடியவர் பி.சுசீலா. கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற இவருக்கு ஏற்கனவே பத்மபூஷண் விருது, ஐந்து முறை தேசிய விருது, மூன்று முறை தமிழக அரசு விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று (நவ.,21) காலை நடந்தது. இதில் மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. அதோடு பின்னணி பாடகி பி.சுசீலாவிற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. அதேபோல், இசையியல் அறிஞர் பி.எம்.சுந்தரம் என்பவருக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதனை தமிழக முதல்வரும், பல்கலைக்கழக வேந்தருமான ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.

பின்னர் ஸ்டாலின் பேசியதாவது: இசைக்கும் எனக்கும் நெருங்கிய உறவு இருக்கிறது. இந்தியாவில் இசைக்காக உருவாக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் இதுதான். முழுக்க முழுக்க மாநில அரசின் நிதியுதவியில் இப்பல்கலை செயல்படுகிறது. அதைவிட சிறப்பு, இப்பல்கலைக்கு மட்டும்தான் மாநில முதல்வர், வேந்தராக இருக்கும் உரிமை உள்ளது. நான் அரசியல் எல்லாம் பேசவில்லை, எதார்த்தத்தை பேசுகிறேன்.


ஜெயலலிதாவுக்கு பாராட்டு

முதல்வரே வேந்தராக இருந்தால் தான் பல்கலைக்கழகங்கள் சிறப்பாக வளர முடியும். மற்றவர்கள் கையில் இருந்தால் அதன் நோக்கம் சிதைந்து விடும் என்பதால் தான் 2013ல் முதல்வரே வேந்தராக இருக்கும் வகையில் அன்றைக்கு முதல்வராக இருந்த ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். இதற்காக அவரை மனதார நாம் பாராட்டலாம், நானும் பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
பாட்டு பாடிய ஸ்டாலின்


நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், பி.சுசீலா பாடிய 'நீ இல்லாத உலகத்திலே..' என்ற பாடலை பாடி காட்டினார். அப்பாடலின்
''நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை..
உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை சிந்தனையில்லை..
காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை..
காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை..
உன்னைக் கண்டு கொண்ட நாள் முதலாய்
பெண்ணுறங்கவில்லை பெண்ணுறங்கவில்லை'' - என்ற வரிகளை ஸ்டாலின் பாடியபோது அரங்கத்தில் இருந்தவர்கள் கைத்தட்டினர்.வாசகர் கருத்து (35)

 • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

  முகம் மட்டுமா கள்ளம் கபடம் இல்லாமல். தலை கூட கள்ள கபடம் இல்லாம இந்த வயசுலயும் கருப்பா இளமையை பறை சாற்றுகிறது.முதல்வரே வேந்தராக இருந்தால் தான் பல்கலைக்கழகங்கள் சிறப்பாக வளர முடியும்..எல்லாமும் முதல்வர் கையில் தான் இருக்கணும். எப்போவும் ஸ்டாலின் தான் முதல்வராயிருக்கணும் ..இந்த வயதிலும் எழுதி பார்த்து படிக்கிறவன் தான் பல்கலை வேந்தராயிருந்தால் தான் .நாடு சிறப்பாயிருக்கும் அப்படீங்கிறீங்க.

 • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

  பல்கலை வேந்தர் ஆளுனரா? முதலமைச்சரா? ..இந்த பல்கலை கழகத்துக்கு இவரு தான் வேந்தர் போல ....

 • Sathyasekaren Sathyanarayanana - Kulithalai ,இந்தியா

  மோடிஜி அவர்கள் எழுதிய கவிதைக்கு விருது கிடைத்துள்ளது, ஆக அது இவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கு இப்பவே அவரது திறமையை காட்டுகிறார்.

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  உன்னைக் கண்டு கொண்ட நாள் முதலாய் பெண்ணுறங்கவில்லை பெண்ணுறங்கவில்லை... திமுக ஆட்சி அமைந்தபின், தமிழக மக்கள் கண்ணுறங்கவில்லை. ஒரே பயம், விடிந்தால் எந்த பொருள் விலை ஏற்றுவார்களோ, ஏற்றப்பட்டிருக்குமோ என்கிற கவலையில் மக்கள் தூங்கவே பயப்படுகிறார்கள்.

 • இராம தாசன் - சிங்கார சென்னை,இந்தியா

  பார்றா நம்ம சுடலை ஜெயா அம்மாவை பாராட்டி விட்டு சொந்த அப்பாவை நடு தெருவில் விட்டு விட்டார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement