Load Image
Advertisement

கோவிட் தடுப்பூசியால் மரணம் அதிகரிப்பா?: மறுக்கிறது ஐ.சி.எம்.ஆர்

Will Covid vaccine increase deaths?: ICMR denies   கோவிட் தடுப்பூசியால் மரணம் அதிகரிப்பா?: மறுக்கிறது ஐ.சி.எம்.ஆர்
ADVERTISEMENT
புதுடில்லி: இந்தியாவில் இளைஞர்களிடையே அதிகரித்துள்ள திடீர் மரணங்களுக்கு கோவிட் தடுப்பூசி காரணமல்ல என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.,) விளக்கம் அளித்துள்ளது.

சமீப காலமாக இந்திய இளைஞர்கள் மாரடைப்பு மற்றும் சில காரணங்களால் திடீர் மரணம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்பவர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து வருவது சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

இது தொடர்பாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.,) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் இளைஞர்கள் திடீர் மரணம் அடைய கோவிட் தடுப்பூசி காரணம் என்று கூறுவது சரியல்ல.

நாட்டில் இளம் வயதினரிடையே மரணத்தின் அபாயங்கள் கோவிட் தடுப்பூசியால் அதிகரிக்கவில்லை. குடும்பத்தை சார்ந்த முன்னோர்களுக்கு இதுபோன்ற திடீர் மரணங்கள் நிகழ்ந்திருக்கலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் தடுப்பூசி காரணமாகத்தான் இளைஞர்களுக்கு மாரடைப்பு நோய் வருகிறது என்று சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாகியது. இதனால் அண்மையில் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் ஐ.சி.எம்.ஆர்., விளக்கம் அளித்துள்ளது.


வாசகர் கருத்து (6)

  • அப்புசாமி -

    அவன் ஆயுசு அம்புட்டுதான்னு சொல்லி கேசை முடிச்சுரலாம்.

  • அப்புசாமி -

    எவனாவது அமெரிக்காவுல ஆராய்ச்சி செஞ்சு சொல்லுவாங்க..

  • இறைவி -

    நான் அறிந்த வரையில் சமீப காலமாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்பவர்கள் சதையை குறைக்க ஸ்டீராய்டு கலந்த பானங்களை அருந்துகிறார்கள். மரணம் அதனாலும் இருக்கலாம். என் உறவினர் நண்பர்கள் அக்கம் பக்கத்தினர் சிலரின் மறைவில் அவர்களுக்கு சர்க்கரை நோய், இருதய நோய், சிறுநீரக நோய் போன்ற பிரச்சனைகள் முன்பே இருந்தவர்கள்தான் அதிகம்

  • Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா

    திடீர் இளம் வயது மரணம் அதிகரித்து உள்ளது என்பது உண்மை ICMR இது போன்ற மரணங்க்கள் எற்படும் முன் ஏற்படும் பொதுவான அறிகுறிகள் என்ன என்ன... எந்த நிலை அறிகுறி ஏர்ப்பட்டதும் எவ்வளவு நேரத்துக்குள் மருத்துவ மனை அணுக வேண்டும், என்ன என்ன மருத்துவ உபகரணங்கள் , மருத்துவ வசதிகள்... மருத்துவ்ர் ( இருதய் அல்லது நுரை ஈர்ல் நிபுனர்,உள்ள மருத்துவமனை களை அணுக வேண்டும் எனபன போற்ற தகவல்களை மக்களுக்கு கொண்டு சேர்த்து விழிப்புணர்வு ஏர்படுத்தலாம் அரசும் கிராமம் வரை இந்த அமைப்பு உள்ளவசதிகளி தயார் நிலையில் வைத்து இருக்கும் படி சுகாரத்துறைக்கு அறிவுறுத்தலாம் ...

  • Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா

    திடீர் இளம் வயது மரணம் அதிகரித்து உள்ளது என்பது உண்மை மக்கள் தொகையில் இதன் சதவீதம் மிக..மிக குறைவாக உளளது ( நூற்றி நாற்பது கோடிமக்களில் சில ஆயிரம் தானே) என்று கடந்து செல்லலாம். ஆனால் கொரோனாவுக்கு பின் இந்த புதிய திடீர் மரணங்கள் திடீர்என்று நடப்பது அதிகரித்து உள்ளது என்பது நிதர்சனமான உண்மை... காரணம் தடுபூசியா கொரொனாவா? எதுவாக வேண்டுமானாலும் இருக்க வாய்ப்பு உள்ளது, குறைந்த பட்சம் ICMR தரவுகளை கண்காணித்து இது போன்ற மரணங்கள் மாதம் மாதம் அதிகரிக்கிறனவா குறைகின்றன? மரணித்தவர்களின் உடற்கூற்றினை ஆராய்ந்து தடுக்கும் மாற்று மருத்துவம் அல்லது உணவு பழக்கம் காரணமா? மது ?புகை பிடித்தல்? போன்றவை காரணமா என அலசி ஆராய்ந்து மக்களுக்கு விழிப்பு உணர்வினை ஏர்படுத்த அரசு மூலம் தக்க நடவடிக்க எடுக்க வேண்டும்... வெறுமனே தடுப்பூசி காரண்ம் அல்ல என நழுவது ஏற்ப்புடயதல்ல

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்