ADVERTISEMENT
ஜெய்ப்பூர்: எங்கள் காங்கிரஸ் அரசை மீண்டும் தேர்ந்தெடுக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கோரியுள்ளார்.
ராஜஸ்தானில் வரும் 25ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் காங்கிரஸ் - பா.ஜ., இடையே கடும் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் சார்பில் ஏற்கனவே சில வாக்குறுதிகள் கூறிவந்தாலும், இன்று (நவ.,21) காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஜெய்ப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளார். இதற்காக ஜெய்ப்பூர் விமான நிலையம் வந்த கார்கேவை, முதல்வர் அசோக் கெலாட் வரவேற்றார்.
அப்போது செய்தியாளர்களிடம் அசோக் கெலாட் கூறியதாவது: தேர்தல் அறிக்கையை வெளியிட காங்கிரஸ் தலைவரே வருகிறார் என்றால், வாக்குறுதிக்கு நாங்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை பார்க்கலாம். கடந்த முறையிலும் தேர்தலில் வென்ற பிறகு, எங்களின் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே எங்கள் வாக்குறுதிகள் முன்வைக்கப்பட்டு, அதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
எங்கள் காங்கிரஸ் அரசை மீண்டும் தேர்ந்தெடுக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். என் ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், வாக்குறுதிகள் மற்றும் உருவாக்கப்பட்ட சட்டங்கள் எல்லாம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், தற்போது அளிக்கும் வாக்குறுதிகளும், நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (12)
கெலோட் ஒன்றும் கெஞ்சவில்லை, சாதனைகளை சொல்லி ஒட்டு கேட்கிறார், கர்நாடகாவில் 40% கமிஷன் வாங்கி ஆட்சியை இழந்த பொய்
ஐந்தாண்டு தண்டனை போதாதா😮💨
பத்து ஆண்டுகளாக தண்டனையை அனுபவிக்கிறோம் என்ன செய்ய
வெற்றி பெற வாழ்த்துகள்...
பாஜக இன்னும் அடுத்த 15 வருடங்களுக்கு அசைக்க முடியாத சக்தி.
கோபால் தைரியமான ஆளாச்சே. குமாரோடு சேர்ந்து இவரும் பயப்படுகிறாரா?
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
ஓட்டுக்காக அனைத்து தந்திரங்களையும் காங்கிரஸ் செய்யும். காங்கிரசை விரட்டி அடிக்க வேண்டியது பாஜகவின் கடமை.