Load Image
Advertisement

ரவா கிச்சடி அனுப்பி வைப்பு! பிறந்தது நம்பிக்கை: குகைக்குள் 41 பேர் உயிரோடு இருக்கின்றனர்

Uttarakhand tunnel collapse ரவா கிச்சடி அனுப்பி வைப்பு! பிறந்தது நம்பிக்கை: குகைக்குள் 41 பேர் உயிரோடு இருக்கின்றனர்
ADVERTISEMENT
டேராடூன்: உத்தரகண்ட் சுரங்கம் தோண்டும் போது குகைக்குள் சிக்கிய 41 பேர் உயிரோடு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இவர்களுக்கு இன்று (நவ.,21) குழாய் மூலம் சூடான ரவா கிச்சடி திரவ ஆகாரமாக வழங்கப்பட்டுள்ளது. குழைவான பருப்பும் குழாய் மூலம் பாட்டல்களில் அனுப்பி வைக்கப்பட்டன. கடந்த 10 நாட்களாக தொழிலாளர்கள் நிலை என்னவென்று தெரியாமல் இருந்த சூழலில் தற்போது நல்ல தகவல் கிடைத்துள்ளது. இந்த செய்தி அறிந்து தொழிலாளர்களின் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொழிலாளர்கள் நலமாக இருப்பதாகவும், குகையில் சிக்கியவர்கள் பேசிய வீடியோவும் வெளியாகி இருக்கிறது.

கடந்த ஒரு வார மீட்பு முயற்சிக்கு வெற்றி கிடைத்திருப்பதாக மாநில முதல்வர் புஷ்கர்சிங் தாமி கூறியுள்ளார்.


உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள பிரம்மகால் - யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில், சில்க்யாரா - தண்டல்காவ்ன் இடையே மலையை குடைந்து சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
கடந்த 12ம் தேதி சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டபோது, சுரங்கப் பாதையின் முகப்புக்கும், தொழிலாளர்கள் பணி செய்த பகுதிக்கும் இடைபட்ட பகுதி திடீரென சரிந்து விழுந்தது. இதில், 41 தொழிலாளர்கள் சுரங்கத்துக்குள் சிக்கினர். ஒரு வாரமாக, அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

உள்ளே சிக்கியுள்ளவர்களுக்கு தேவையான உணவுகள் உள்ளிட்டவற்றை வழங்க 40 மீட்டருக்கு குழாய் அமைக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளை கண்காணிக்க, உயர் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


வாசகர் கருத்து (42)

  • Karuppusamy Maruthamuthu - Coimbatore ,இந்தியா

    இத்தனை தொழில் நுட்ப வளர்ச்சி அடைந்தும், 250 மணி நேரமாக இன்னும் ஒருவரை கூட மீட்க முடியவில்லை என்பது தான் தலை குனிய வைக்கும் உண்மை....

    • Velan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா

      இதுக்கு தான் டபுள் எஞ்சினை குறை சொல்றோம் அவர்களின் லட்சணத்தை குறைசொல்கிறோம். அவர்கள் எல்லாத்தையும் வெறும் வாயில் வடை சுடுவதை மட்டுமே முழுநேர வேலையா வெச்சிருப்பதை குறை சொல்கிறோம்

    • Yaro Oruvan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

      ஆமாம் இந்நேரம் திருட்டு ரயில் மாடல் ஆட்சின்னா உள்ள இறங்கி தூக்கிக்கினு வந்துருப்பார் நம்ம மூரக்ஸ் மாம்ஸ்.. ஏற்கனவே உக்ரைனுக்கு பஸ் விட்டு மாணவர்களை மீட்ட கும்பல் ஆச்சே

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    விரைவில் அனைவரையும் பத்திரமாக மீட்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

  • Uma Radha -

    0 ....

  • Raa - Chennai,இந்தியா

    சீக்கிரம் தொழிலார்கள் வெளி வர பிரார்திக்கிரோம்

  • mrsethuraman - Bangalore,இந்தியா

    விரைவில் நலமுடன் அனைவரும் வெளியில் வர பிரார்த்திப்போம் . கூடவே அரசாங்கம் அவர்களுக்கு கணிசமான தொகையை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் .

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement