ரயில்வேயில் சில மாதங்களாக விபத்துக்கள் நடக்கின்றன. எனவே, சிக்னல், பாதை உள்பட பாதுகாப்பு பிரிவுகளில் கண்காணிப்பு பணிகளை ரயில்வே அமைச்சகம் தீவிரப்படுத்தி உள்ளது.
ஒவ்வொரு விரைவு ரயிலிலும் ஓட்டுனர், உதவி ஓட்டுனர் உண்டு. ரயில் செல்லும் வேகத்தை தெரிவிப்பது, சிக்னல் மாற்றம், சிக்னல் பரிமாற்றம் குறித்து தகவல் அளிப்பது, ரயில் இன்ஜினில் சோதனை உள்ளிட்ட பணிகளை உதவி ஓட்டுனர் மேற்கொள்ள வேண்டும்.
அவரின் இந்தப் பணிகளை, ரயில் ஓட்டுனர் கண்காணித்து, ரயில்வே பணியாளர்களுக்கான, 'சாலக் டல்' செயலியில் பதிவு செய்ய வேண்டும். இதற்கான உத்தரவை, ரயில்வே அமைச்சகம் பிறப்பித்துள்ளது.
ரயில்வே அமைச்சகத்தின் இந்த உத்தரவின் நோக்கம் என்னவென்று புரியவில்லை. ஓட்டுனர் மற்றும் உதவி ஓட்டுனர் பணியை மேற்பார்வை மற்றும் ஆய்வு செய்ய ஏற்கனவே ரயில் இன்ஜின்களில் கேமராக்கள் உள்ளன. இதுதவிர, பணிகளை ஆய்வு செய்ய லோகோ இன்ஸ்பெக்டர் என்ற தனிப்பிரிவும் உள்ளது. இந்நிலையில், ஓட்டுனர், உதவி ஓட்டுனர் பணியை ஒவ்வொரு முறையும் மதிப்பீடு செய்ய வேண்டும் என்ற நடைமுறை தேவையற்றது. ஏற்கனவே ரயில் ஓட்டுனரால், வேகம், சிக்னல் மற்ற வேலைகளில் கவனம் செலுத்த முடியவில்லை. மற்ற அலுவலக பணி போல, ரயில் ஓட்டுனர் வேலையை பார்க்க முடியாது. உதவி ஓட்டுனர் பணியில் குறை இருந்தால், அதை ஆவணம் உருவாக்கி தான் சரி செய்ய வேண்டும் என்பதில்லை. எனவே, இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும்.
- பாலசந்திரன், மத்திய அமைப்பு செயலாளர், அகில இந்திய ரயில் ஓட்டுனர் கழகம்
வாசகர் கருத்து (3)
ஓட்டுனர் ரயிலை ஓட்டும் போது எவ்வாறு உதவி ஓட்டுனர் பணியை மேற்பார்வை செய்ய முடியும். ரயில் ஓட்டுனர் ரயிலை இயக்கும் போது, வேகம், சிக்னல் வேலைகளில் தான் கவனம் செலுத்த முடியும்..
ஓட்டுநர், உதவி ஓட்டுநர் இருவரும் ஒருவருக்கு ஒருவர் உதவி திறமையாக பணிபுரியவேண்டும். அவர்களை நம்பித்தான் ஆயிரக்கணக்கானவர்கள் ரயில்களில் பயணம் மேட்கொள்கிறார்கள்.
ஆம். திரும்ப பெறவேண்டும். மற்றவர்கள் எல்லாம் வேலை இல்லை இது.