ச. கிருஷ்ணன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்தது முதல், ஹிந்து பண்டிகைகளுக்கு மறந்தும் கூட வாழ்த்து சொல்வதில்லை. இதில், அவர்கள் கவனமாகவும், உறுதியாகவும் இருக்கின்றனர். அதேநேரம், பிற மத பண்டிகைகளுக்கு விழுந்தடித்து வாழ்த்து தெரிவிக்கின்றனர்.
இதுபோன்ற பிரச்னை பாரதத்தின் பிற மாநிலங்களில் அல்லாமல் தமிழகத்தில் மட்டுமே இருப்பதாக தெரிகிறது. அதே நேரம், இவர்கள் வாழ்த்து சொல்லாததால், ஹிந்துக்கள் பண்டிகைகளை கொண்டாடாமல் தவிர்க்க போவதில்லை.
ஆனால், இந்த உண்மையை உணராமல், ஹிந்துக்களை உதாசீனப்படுத்துவது வேதனையடைய வைக்கிறது. இதனால், தமிழகத்தில் ஓட்டுரிமை உள்ள ஹிந்துக்களுக்கு நம் அறிவுரையும், ஆலோசனையும் ஒன்றே ஒன்றுதான்...
அதாவது, ஹிந்து பண்டிகைகளை மதிப்பதில்லை, வாழ்த்து சொல்வதில்லை என்பதில், கழகம் எவ்வளவு உறுதியாக உள்ளதோ, அதுபோல, ஹிந்துக்களும், 'ஹிந்து பண்டிகைகளுக்கு மதிப்பும், மரியாதையும் தராத கழகத்திற்கு ஓட்டளிப்பதில்லை' என்பதில் உறுதியாக வேண்டும்.
இப்படி உறுதியாக நின்று, அதை தேர்தலிலும் செயல்படுத்தி காட்டினால் தான், ஹிந்துக்களின் அருமை, 'திராவிட மாடல்' ஆட்சியாளர்களுக்கு தெரியவரும்.
வாசகர் கருத்து (121)
இந்த திருடர்கள் தலைவன் வாழ்த்து சொல்லவேண்டும் என்று மானமுள்ள ஹிந்து காத்திருக்கவில்லை, இரண்டாயிரம் வாங்கிக்கொண்டு வோட்டை போடும் முட்டாள் இந்துக்கள் தான் வருத்தப்படவேண்டும். வாழ்த்தைவிட. கோவில்களை இடித்துக்கொண்டு இருக்கிறார்கள் அதற்க்கு போராட வேண்டும். திருவண்ணாமலையில் முன்பு அம்மணி அம்மாள் மண்டபத்தை இடித்தார்கள், கோவில் கோபுரத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அருகில் ஷாப்பிங் காம்ப்லெக்ஸ் ஈன்று பள்ளம் தூண்டினார்கள், இப்போது பஸ் நிலையத்திற்கு என்று சித்தர் சமாதிகளை இடித்திருக்கிறார்கள். இது போன்று பல அநியாயங்களை செய்கிறார்கள் இதற்கெல்லாம் பொங்காமல் முட்டாள் இந்துக்கள் சன் டிவி யின் சமூக சீர் கெடுக்கும் சிரியல்களில் மூழ்கி இறுக்கிறார்கள்.
In parliament elections, we will stay away from the rogue DMK party
திகமான வரியை விதித்துள்ளது பெட்ரோலியம் மற்றும் காஸ் விலாஸை மூன்று மடங்கு உயர்த்தியது
கிறித்துவ பிச்சை அரசு இப்படித்தான் செய்யும்??இது தானே அவர்கள் மதக்கோட்பாடு
பொதுவாக தமிழ் நாட்டில் வோட்டுக்காக பணம் வாங்குகிறார்கள் என்ற எண்ணம் வருகிறது. மேலும் அந்த நம்பிக்கையில் தான் சில கட்சிகள் இந்த மாதிரி செய்கிறார்கள். எல்ல ஹிந்துக்களும் ஒன்றுசேர்ந்து இந்த மாதிரி கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டோம் என உறுதி செய்ய வேண்டும் மற்றும் தேர்தல் நேரத்தில் எந்த கட்சிகளிடமும் வோட்டுக்க எந்த வித சலுகைகளையும் ஏற்க கூடாது இதை அணைத்து ஹிந்து வாக்காளர்கள் அல்லது அணைத்து வாக்காளர்களும் உறுதி கொள்ளவேண்டும். ஏனெனில் இன்று ஹிந்துக்கள் நாளை வேறு எந்த மதத்திற்கும் இது நேரலாம்.