பணியில் இருக்கும் கிராம உதவியாளர்கள் உயிரிழந்தால், குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் வாரிசு வேலையை, 1999ல் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வழங்கினார்.
இந்த உத்தரவை. தற்போதைய தி.மு.க., அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. இது, கிராம உதவியாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையடுத்து, 'தந்தை போட்ட உத்தரவை தனயன் தட்டிப்பறிப்பதா' என கேள்வி கேட்டு, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர், நீதி கேட்கும் போராட்டத்தை துவக்கியிருக்கின்றனர்.
அச்சங்கத்தினர் கூறியதாவது:
ஊனமுற்றவர்கள் என்று கூறினால் மனதளவில் பாதிக்கப்படுவர் என கருதிய முன்னாள் முதல்வர் கருணாநிதி, மாற்றுத்திறனாளிகள் என பெயரிட்டார். மாற்றுத்திறனாளிகளாக இருக்கும் கிராம உதவியாளர்கள் பெற்று வந்த எரிபொருள் படி ரூ.2,500ஐ கருணையே இல்லாமல் நிறுத்தியது நியாயம் தானா?
ஓய்வு பெற்றவர்களுக்கு பிடித்தம் செய்த ஓய்வூதிய தொகையை வழங்காமல் காலம் தாழ்த்துவது சரியா? கிராம உதவியாளர்கள் 24 மணி நேரமும் 'அலர்ட்'டாக இருந்து பணியாற்ற வேண்டும். அவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியமே வழங்கப்படுகிறது. வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் கேட்டு, 30 ஆண்டுகளாக போராடி வந்தாலும் கருணை இல்லையா என்பது உட்பட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 23ம் தேதி, தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்க, அனைத்து தாலுகா அலுவலகங்கள் முன் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும்.
டிச., 7ம் தேதி பிற்பகல், 3:30 முதல் மாலை, 6:00 மணி வரை, தாலுகா அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டம்; டிச., 19ல் விடுப்பு போராட்டம்; டிச., 28ல் கலெக்டர் அலுவலகங்கள் முன், காலை, 10:00 முதல் மாலை, 5:00மணி வரை தர்ணா போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து (6)
விடியல் வெனும்முண்ணு திருட்டு திராவிட ஒன்கொலனுக்கு ஒட்டு போட்டியே தமிழா... இப்போ அனுபவி....
நான் கருணாநிதியின் மகன், நான் கருணாநிதியின் பேரன் என சொல்லிக்கொண்டு அவர் பெயரில் ரோடு கட்டிடங்கள், மார்கெட் வளாகம், வளைவுகள் வைப்பதில் மட்டும்தான் கருணாநிதி வருவார். பல்கலைகழக வேந்தராக ஒரு முதலமைச்சர் இருக்கக்கூடாது என சட்டசபையில் பேசி அந்த முடிவை எதிர்த்தார். ஆனால் தனயன் அதை மாற்றி சட்டம் இயற்றுகிறார். இதுதான் டா திமுக.
காசு வாங்கிட்டு ஓட்டு போட்ட அடிமைகள் பேசாம இருக்கணும்
மஹாராஜா கருணாநிதி பிறப்பித்த உத்தரவை அவருக்கு பின் வந்த மஹாராஜா பிறப்பிப்பது தவரே என்றாலும், மக்கள் இவருக்கு பின் வரும் இன்றைய இளவரசர் பட்டம் மஹாராஜா ஆகும் வரை பொறுமை காப்பது தான் சரி.
1). தந்தை 2). கட்சி3). தொண்டன் 4). தமிழகம்5). மக்கள் 6). கூட்டணி கட்சிகள் 7). கூட்டணி கட்சி தலைவர்கள்8). ஒட்டு போட்ட மக்கள்.9). நமக்கு உதவிய அரசாங்க ஊழியர்கள்.10). சிறுபான்மையினர் என்று மேலே சொன்ன எதையும் நாம் பெரிதாக எடுத்து கொள்வது இல்லை.நமக்கு இரண்டு விஷயங்கள் முக்கியமானவை1). ஒன்று பணம் பணம் மற்றும் பணம்.2). இரண்டாவது எமது குடும்பம் மகன் மற்றும் மருமகன் வளர்ச்சி.