கடத்தப்பட்ட சரக்கு கப்பலில் 25 பேர் கதி என்ன
மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே கடந்த மாதம் 7ம் தேதி முதல் போர் நடந்து வருகிறது.
எச்சரிக்கை
இந்த போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஏமனின் ஹவுதி கிளர்ச்சி படை ஆதரவு தெரிவித்து வருகிறது. போர் நீடிக்கும் சூழலில் 'இஸ்ரேலின் கப்பல்கள் அல்லது அவர்களது கொடி பறக்கக்கூடிய கப்பல் செங்கடல் பகுதியில் சென்றால் அவற்றை கடத்துவோம்' என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரித்திருந்தனர்.
நடுக்கடலில் கப்பல் பயணித்த போது அதன் மேலே பறந்த ஹெலிகாப்டர் வாயிலாக ஆயுதங்களுடன் ஒரு சில கிளர்ச்சியாளர்கள் குதித்தனர். பின்னர் மாலுமியை மிரட்டி கப்பலை கடத்திய அவர்கள் தற்போது அதை ஏமன் துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமானது என்ற நிலையில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கப்பலை கடத்திய சூழலில் இஸ்ரேல் அரசு அதை மறுத்துள்ளது.
இந்த கப்பல் பிரிட்டன் நிறுவனத்துக்கு சொந்தமானது என்றும் ஆபிரகாம் உங்கர் என்னும் இஸ்ரேலிய தொழிலதிபருக்கு அதில் பங்கு உள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.
அதே சமயம் இந்தகப்பல் ஜப்பானிய நிறுவனத்தால் இயக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
ஆலோசனை
கப்பல் கடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல் அரசு அதில் உள்ள ஜப்பான் உக்ரைன் பல்கேரியா இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 25 சிப்பந்திகளை மீட்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட நாட்டுஅரசுகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
இதற்கிடையே கப்பலை கடத்தியதை ஒப்புக் கொண்டுள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அதில் உள்ளவர்கள் இஸ்லாமிய கொள்கைகள் மற்றும் மதிப்புகளின்படி நடத்துவதாக கூறியுள்ளனர்.
மேற்காசிய நாடான துருக்கியில் ஏற்பட்ட புயலில், கருங்கடலில் அந்நாட்டு கப்பல் சிக்கியதில், அதில் பயணித்த பணியாளர் ஒருவர் பலியானார். சோங்குல்டாக் மாகாணத்தில் உள்ள எரெக்லி பகுதியில் கப்பல் சென்றபோது, அதிலிருந்த 12 பேருடன் கப்பல் மாயமானது. இதையடுத்து, அதை தேடும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது. பல மணி நேர தேடுதலுக்குப் பின், கப்பலில் பயணித்த சமையல்காரரின் உடல் கடலில் மீட்கப்பட்டது. மாயமான 11 பேரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அதே பகுதியில் புயலில் சிக்கி இரண்டாக உடைந்த கேமரூன் நாட்டு கப்பலில் பயணித்த 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட சில மணி நேரத்தில், துருக்கி கப்பல் மாயமாகியுள்ளது-.
கப்பல் கடத்தியவர்கள் மெது ஒன்றும் செய்யவேண்டாம். அவர்கள் நாட்டின் மீ து போர்தொடுத்தால் போதும். நாட்டின் மீது விமான தாக்குதல் நடத்தலாம்.