ADVERTISEMENT
குன்னூர்: குன்னூர் அருகே, ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேருக்கு, பகவத் கீதையின் 'ஆன்மா அழியாதது' உபதேசம் கொண்ட நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு கடந்த, 2021 டிச.,8ல், வருகை தந்த முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உட்பட, 14 பேர் நஞ்சப்பா சத்திரம் கிராமத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தனர்.
விபத்து நடந்த இடத்தில், வெலிங்டன் ராணுவ மையம் சார்பில் கடந்த, 3 மாதங்களாக நடந்து வந்த நினைவு தூண் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. வரும் டிச., 8ல் நடக்கும், 2ம் ஆண்டு நினைவு தினத்தில் நினைவு தூண் திறக்கப்பட உள்ளது.

பகவத் கீதை உபதேசம்
அந்த நினைவு தூணில், 'ஸ்மிரிதிகா' என்ற தலைப்பில், சமஸ்கிருதம், தமிழ், இந்தி, ஆங்கிலம் மொழிகளில் பகவத் கீதையின், 2:23 உபதேச வாசகம் பொறிக்கப்பட்டு, அதன் கீழ், உயிரிழந்த பிபின்ராவத் உட்பட, 14 பேரின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளது.
மேலும், 'ஆன்மா அழியாதது; எந்த ஆயுதத்தாலும் அதை துளைக்க முடியாது ; எந்த நெருப்பாலும் அதை அழிக்க முடியாது ; தண்ணீராலும் அதை ஈரப்படுத்த முடியாது ; காற்றாலும் அதை உலர்த்த முடியாது,' என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டுள்ளன.
சனாதன வெளிப்பாடு
மாயையில் இருந்து ஜீவன் விடுபட்ட பிறகும், அந்த ஜீவன் ஒரு தனி அடையாளமாக இருக்கிறது என்பது, அர்ஜூனனுக்கு இறைவன் அளித்த உபதேசமாக உள்ளது. உயிர்கள் பரமாத்மாவின் பாகங்களாக விவரிக்கப்பட்டுள்ள 'வராஹ' புராணத்தில், கூறப்பட்டுள்ள 'ஆன்மா அழியாதது' என்பதை சனாதனம் வெளிப்படுத்துகிறது.
விபத்துக்கான காரணம் இன்றுவரை அறியப்படவில்லை. விபத்தில் நாட்டின் தலை சிறந்த முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் பல அதிகாரிகளின் மரணம் இன்றும் மறக்கமுடியாது ஒன்று. அவர்கள் அனைவருக்கும் நாம் பிரார்த்தனை செய்வோம்.