பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
சமூக நீதியின் தாய் என, மார்தட்டும் தமிழகத்தின் வயிறு வாடிக் கொண்டிருக்கிறது; அதன் கருப்பையோ காய்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு காரணமான ஆட்சி யாளர்களுக்கோ கவலை இல்லை. தமிழகம் என்ற தொட்டிலில் சமூக நீதியாவது இருக்கிறதா என, எட்டிப்பார்த்தேன்; அது ஆடாமல் காலியாக கிடந்தது. இரும்புக் கட்டில் என்பதால் ஆட மறுக்கிறதோ என, ஆட்டிப் பார்த்தேன். அந்த தொட்டில் துருப்பிடித்து கிடந்தது.
ம.தி.மு.க., தலைமை நிலைய செயலர் துரை வைகோ அறிக்கை:
தமிழக மீனவர் நலன்களை பாதுகாப்பது மத்திய அரசின் கடமை. பேச்சு பலனிளிக்கவில்லை என்றால், இந்திய கடற்பகுதியில் எல்லை தாண்டி வரும் இலங்கை கடற்படையினரையும், கடற் கொள்ளையர்களையும் மத்திய அரசு பாராபட்சமின்றி சுட்டு வீழ்த்த வேண்டும். அப்போது தான் இந்தியாவின் மீது இலங்கை அரசுக்கு பயம் வரும். தமிழக மீனவர்கள் தாக்குதலுக்கும், கைது நடவடிக்கைகளுக்கும் உள்ளாவது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும்.
அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: மணல் கொள்ளையர்களுக்கு மகுடம் சூட்டுவதும், மக்கள் வரி பணத்தை கொள்ளை அடிப்பவர்களுக்கு, பதவி, பட்டம் வழங்குவதும் தான் திராவிட மாடலா? அமலாக்க துறையால் விசாரிக்கப்பட்டு வரும் கைதிக்கு, ஜாமின் வாங்க பல்வேறு யுக்திகளை கையாண்டு வரும் தி.மு.க.,வை பார்த்து, மக்கள் கேள்வி கேட்க தயாராகி விட்டனர். உண்மையான விடியலை மக்கள் விரைவில் உங்களுக்கு காட்டுவர்.
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
சென்னை, குன்றத்துார் அரசு பள்ளி மாணவன் சந்தோஷ், அரசு பஸ் படியில் தொங்கியபடி பயணித்தபோது கீழே விழுந்ததால், கால்கள் நசுங்கி செயலிழந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது. மாணவர்களிடம் ஒழுக்கத்தை கொண்டு வர முனைந்த பெண்மணி மீது வழக்கு தொடுத்த, மாநகர போக்குவரத்து கழகம், தற்போதைய சம்பவத்திற்கு டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்குமா அல்லது மாணவன் மீது தான் தவறு என, தப்பிக்க பார்க்குமா?
வாசகர் கருத்து (15)
ப.ம.க. எப்போதுமே எந்த காலத்திலும் ஆட்சிக்கு வரமுடியாது. தேர்தலுக்கு தேர்தல் கட்சிகளிடம் பேரம் பேசி பணத்தை சுருட்டுவது தன இவர்களின் எண்ணம்.
அப்பிடி ஒரு நினைப்பு இருக்கா துட்டு பாத்தமான்னு இருக்கணும்
பா ம க எப்பவுமே ஆட்சிக்கு வராது காரணம் ஒரு நிலையான கொள்கை கிடையாது, பா ம க விழும் வாரிசு அரசியல் அப்பறம் எப்படி விடியும் மகனை மந்திரியாக்குவது அப்பறம் கட்சி தலைவராக்குவது அப்பறம் எப்படி ஆட்சிக்கு வரமுடியும் உங்களிடமும் மக்களின் வரி பணம் கணிசமாக உள்ளது இன்றய உங்கள் சொத்து மதிப்பு எவ்வளவு எப்படி வந்தது ..?? நினைத்து பாருங்கள் நீங்கள் எப்படி ஆட்சிக்கு வரமுடியும் கட்சி தொண்டர்களை எல்லாம் நல்ல பயன்படுத்தி கொள்கிறீர்கள் ஆனால் அவர்களுக்கு முக்கிய துவம் கொடுப்பது இல்லை உதாரணம் காடுவெட்டி குரு உசுப்பி விட்டு உசுப்பி விட்டு மேடையில் பேசவிட்டு உயிரேயே எடுத்து விடீங்க ...
பாமக தனது நிலைப்பாட்டை நன்றாக அறிந்துகொண்டு பிற பெரிய கட்சியினரிடம் பேரம்பேசி காசுபார்த்து வாழ்ந்துகொண்டு இருக்கிறது . ஆட்சி அமைப்பதெல்லாம் கனவே. தமிழகத்தில் அண்டிப்பிழைக்கும் கட்சிகளே அதிகம் . .
தெற்கே சூரியன் உதிக்கும் போது பா.ம.க தமிழ் நாட்டின் ஆட்சி பீடத்தில் அமையும் என்று ஒரு பாலக்கரை ஜோசியர் சொன்னதாக கேள்வி 1