Load Image
Advertisement

துாய்மை இல்லாத நடைமேம்பாலங்கள் உரிமம் ரத்து என மாநகராட்சி எச்சரிக்கை



பெங்களூரு: 'பெங்களூரின் நடைமேம்பாலங்கள், துாய்மையாக இருக்க வேண்டும். அனைத்து மின் ஏற்றிகளும் செயல்பட வேண்டும். இந்த உத்தரவை பின்பற்றாவிட்டால், உரிமம் ரத்து செய்யப்படும்' என ஒப்பந்ததாரர்களுக்கு பெங்களூரு மாநகராட்சி எச்சரித்துள்ளது.

பெங்களூரு மாநகராட்சி திட்டப்பிரிவு சிறப்பு கமிஷனர் திரிலோக் சந்திரா கூறியதாவது:

பெங்களூரின் பல்வேறு இடங்களில் பாதசாரிகளுக்கு வசதியாக, நடைமேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

இந்த நடைமேம்பாலங்களை தனியார் நிறுவனங்கள் கட்டின.

ஆண்டுதோறும் தரை வாடகை செலுத்துவது உட்பட மற்ற நிபந்தனைகளின் படி 10 ஆண்டு முதல் 30 ஆண்டுகள் வரை, ஒப்பந்தத்துக்கு அளிக்கப்பட்டது.

நடைமேம்பாலங்கள் துாய்மையாக இல்லை; மின் ஏற்றிகளும் செயல்படுவதில்லை என, பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

ஒப்பந்த நிபந்தனைபடி நடைமேம்பாலங்களை நிர்வகிக்க வேண்டும்; துாய்மையாக வைத்திருக்க வேண்டும். மின் ஏற்றிகள் அல்லது நகரும் படிக்கட்டுகள் செயல்படும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இது ஒப்பந்ததாரர்களின் பொறுப்பு.

தனியார் ஒருங்கிணைப்பில் கட்டப்பட்ட நடைமேம்பாலங்களுக்கு, ஒப்பந்த நிறுவனங்கள் ஆண்டுதோறும் 2.16 கோடி ரூபாய் தரை வாடகை செலுத்த வேண்டும்.

வாடகை பாக்கி வைத்துள்ள ஏஜன்சிகள், நடைமேம்பாலங்களை துாய்மையாக வைத்திராத ஏஜன்சிகளுக்கு, நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

நிபந்தனைகளை மீறும் ஏஜென்சிகளின் உரிமம் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement