ADVERTISEMENT
சாம்ராஜ்நகர்: மாதேஸ்வரன் கோவிலில் கார்த்திகை மாத முதல் திங்கட்கிழமை சிறப்பு பூஜைகள் நேற்று கோலாகலமாக நடந்தன. நேற்றிரவு தங்கத் தேரோட்டம் நடந்தது.
சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனுார் தாலுகாவின் மாதேஸ்வரன் மலையில் பிரசித்தி பெற்ற மாதேஸ்வரன் சுவாமி கோவில் அமைந்துள்ளது.
கார்த்திகை மாதத்தின் அனைத்து திங்கட்கிழமைகளிலும் இங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இதன்படி முதல் திங்கட்கிழமையான நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன.
சுவாமியை தரிசிக்க அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். பலத்த பாதுகாப்புடன், நேற்றிரவு தங்கத் தேரோட்டம் நடந்தது.
பலரும் தங்கள் குழந்தைகளுக்கு மொட்டை அடித்து, நேர்த்திக் கடன் செலுத்தினர். காலை முதல், இரவு வரை பக்தர்கள் வந்து கொண்டே இருந்தனர். சாம்ராஜ்நகர், மாண்டியா, மைசூரு, ராம்நகர், பெங்களூரு, துமகூரு உட்பட கர்நாடகா மட்டுமின்றி, தமிழகத்தின் நீலகிரி, ஈரோடு, சேலம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!