ADVERTISEMENT
சிவாஜிநகர்: முதியவருக்கு அறுவை சிகிச்சை செய்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரங்கநாத், மனிதாபிமானத்தை வெளிப்படுத்தினார்.
துமகூரு மாவட்டம், குனிகல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரங்கநாத். மருத்துவரான இவர், தன் தொகுதிக்கு உட்பட்ட நான்கு ஏழைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
இதற்கிடையில், குனிகல் தாலுகா, ஹுத்ரிதுர்கா பேரூராட்சி, கல்லய்யபாளையா கிராமத்தை சேர்ந்த திம்மையா, 66, என்பவர் பல நாட்களாக இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்தார்.
அறுவை சிகிச்சை செய்தால் தான், குணமாகும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். சிகிச்சைக்கு பணம் இன்றி தவித்தார்.
இதை அறிந்த எம்.எல்.ஏ., ரங்கநாத், முதியவருக்கு தானே அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தார்.
பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனைக்கு வரவழைத்து பரிசோதனை செய்தார். பின், நேற்று தன்னுடைய தலைமையிலான மருத்துவ குழு, முதியவருக்கு அறுவை சிகிச்சை செய்தது. எம்.எல்.ஏ.,வின் மனிதாபிமான செயலுக்கு தொகுதி மக்கள் பாராட்டினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!