ADVERTISEMENT
விஜயபுரா: பாகல்கோட், ஹூன்குந்த் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயானந்த காசப்பனவர். இவரது மனைவி வீணா, நேற்று மதியம் காரில் சிந்தகிக்கு சென்று கொண்டிருந்தார்.
விஜயபுரா நகரின், தேசிய நெடுஞ்சாலை - 50ல், காரின் குறுக்கே பைக் வந்தது. அவர் மீது மோதுவதைத் தவிர்க்க முற்பட்டபோது, கார் விபத்துக்குள்ளானது. காயமடைந்த வீணா, காரை அங்கேயே விட்டுவிட்டு, சம்பவ இடத்தின் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சை பெறுகிறார்.
தகவலறிந்த எம்.எல்.ஏ., விஜயானந்தா, உடனடியாக மருத்துவமனைக்கு சென்று, மனைவியின் உடல் நலனை விசாரித்தார். விஜயபுரா போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவாகியுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!