ADVERTISEMENT
பாகல்கோட்: ''அடுத்தாண்டு ஜனவரி 26ம் தேதிக்கு பின், 'ஆப்பரேஷன் கை' ஆரம்பமாகும். அதன் பின், கர்நாடகா அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும்,'' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., லட்சுமண் சவதி தெரிவித்தார்.
அரசியல் தலைவர்களை ஒரு கட்சியில் இருந்து, மற்றொரு கட்சிக்கு இழுப்பது கர்நாடகாவில் சாதாரணம் என்றே சொல்லலாம். கடந்த சட்டசபை தேர்தலின்போதும், காங்கிரஸ், பா.ஜ., - ம.ஜ.த., என மூன்று கட்சிகளின் சில தலைவர்கள், வெவ்வேறு கட்சிக்கு இழுக்கப்பட்டனர்.
இதுபோன்று, அடுத்தாண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலுக்கும் 'ஆப்பரேஷன்' நடத்த அனைத்து அரசியல் கட்சிகளுமே இப்போதே காய் நகர்த்துகின்றன.
இதுகுறித்து, அதானி காங்கிரஸ் எம்.எல்.ஏ., லட்சுமண் சவதி, பாகல்கோட்டில் நேற்று கூறியதாவது:
லோக்சபா தேர்தலில் குறைந்தபட்சம், 20 தொகுதிகளில் வெற்றி பெறுவது காங்கிரசின் இலக்கு. காங்கிரஸ் எப்போதுமே ஒரு சமுதாயத்தை ஆதரிக்கவில்லை. அனைத்து சமுதாயங்களையும் ஒன்றாக அழைத்துச் செல்கிறோம்.
பா.ஜ., கொள்கை மீறி செயல்படுகிறது. அக்கட்சி தலைவர்களிடையே அதிருப்தி வெடித்து கொதிக்கிறது. எரிமலை போன்று வெடிப்பது மட்டுமே பாக்கி உள்ளது.
அடுத்தாண்டு ஜனவரி 26ம் தேதிக்கு பின், 'ஆப்பரேஷன் கை' ஆரம்பமாகும். அதன் பின், கர்நாடகா அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும். அதுவரை வேறு கட்சிகளில் இருந்து விலகி, யார் யார் காங்கிரசில் இணைவர் என்பதை நான் பகிரங்கப்படுத்த மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!