பெங்களூரு - சென்னை- இடையே சிறப்பு இரவு வந்தே பாரத் ரயில்
பெங்களூரு: இந்திய ரயில்வேயில் நள்ளிரவில் இயக்கப்படும் முதல், 'வந்தே பாரத்' ரயில், யஷ்வந்த்பூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு இன்று இயக்கப்படுகிறது.
தமிழகத்தின் சென்னை சென்ட்ரலில் இருந்து, பெங்களூரு வழியாக மைசூருக்கும்; தார்வாடில் இருந்து, கே.எஸ்.ஆர்., பெங்களூருக்கும்; தெலுங்கானாவின் காச்சேகுடாவில் இருந்து, யஷ்வந்த்பூருக்கும் இடையே என மூன்று வந்தே பாரத் ரயில்கள் கர்நாடக மாநிலத்திற்குள் இயக்கப்படுகின்றன.
இதற்கிடையில், பயணியர் வசதிக்காக, சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூரு எஸ்.எம்.வி.டி.,க்கு நேற்று, வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை துவக்கப்பட்டது.
இதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து, நேற்று மாலை 5:15 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது. காட்பாடியில் மட்டும் நின்று, இரவு 10:00 மணிக்கு எஸ்.எம்.வி.டி., பெங்களூருக்கு வந்தடைந்தது.
மறு மார்க்கத்தில், யஷ்வந்த்பூரில் இருந்து இன்று இரவு 11:00 மணிக்கு புறப்பட்டு, நாளை அதிகாலை 4:30 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும். இந்திய ரயில்வேயில் நள்ளிரவில் இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரயில் இது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!