புதிய வழித்தடங்களில் பி.எம்.டி.சி., பஸ்கள்
பெங்களூரு: ஜாலஹள்ளி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து புதிய வழித்தடங்களில் பஸ்கள் தொடர்பாக, பி.எம்.டி.சி., நேற்று வெளியிட்ட அறிக்கை:
மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இணைப்பை ஏற்படுத்தும் வகையில், புதிய வழித்தடங்களில் பி.எம்.டி.சி., பஸ்களை அறிமுகம் செய்துள்ளது. இன்று - நேற்று முதல், MF - 23E, MF - 25, MF - 27 எண் கொண்ட பஸ்கள், ஜாலஹள்ளி மெட்ரோ நிலையத்தில் இருந்து புதிய வழித்தடங்களில் போக்குவரத்தை துவங்கின.
MF - 23E எண் கொண்ட பஸ், எம்.எஸ்.பாளையா, சிக்கபானவாரா, கானிகரஹள்ளி வழியாக குனி அக்ரஹாரா வரை செல்லும்.
MF - 25 எண் கொண்ட பஸ், நாகசந்திரா, திப்பேனஹள்ளி வழியாக எட்டாவது மைலுக்கு செல்லும்.
MF - 27 எண் கொண்ட பஸ், பாகல்குன்டே, ஆச்சார்யா கல்லுாரி, ஆலுார் வழியாக மாகளிக்கு சென்றடையும். புதிய வழித்தடங்களில் பஸ்களை இயக்குவதால், ஐ.டி., நிறுவனம் உட்பட பல பகுதிகளில் பணியாற்றுவோருக்கு உதவியாக இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!