Load Image
Advertisement

முதல்வர், துணை முதல்வருடன் பா.ஜ., தலைவர் ஸ்ரீராமுலு சந்திப்பு

 BJP President Sreeramulu meeting with Chief Minister, Deputy Chief Minister   முதல்வர், துணை முதல்வருடன் பா.ஜ., தலைவர் ஸ்ரீராமுலு சந்திப்பு
ADVERTISEMENT
பெங்களூரு: லோக்சபா தேர்தல் நெருங்கும் வேளையில் முதல்வர், துணை முதல்வர் ஆகியோரை, பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

லோக்சபா தேர்தலுக்கு, இன்னும் சில மாதங்களே உள்ளன. ஆளுங்கட்சியான காங்கிரஸ், எதிர்க்கட்சிகள் பா.ஜ., - ம.ஜ.த., தயாராகின்றன.

சட்டசபை தேர்தலில் தோற்ற பா.ஜ., லோக்சபா தேர்தலை 'குறி' வைத்துள்ளது. குறைந்தபட்சம் 20 தொகுதிகளை கைப்பற்ற முயற்சிக்கிறது.

பா.ஜ.,வின் தலைவர்களுக்கு, காங்கிரஸ் வலைவிரித்துள்ளது. ஒரு கட்சியில் இருந்து, மற்றொரு கட்சிக்கு தாவுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

இந்நிலையில், பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு, நேற்று காலை துணை முதல்வர் சிவகுமாரை, பெங்களூரின், சதாசிவநகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். அங்கிருந்து புறப்பட்ட ஸ்ரீராமுலு, கிருஷ்ணா அலுவலகத்துக்குச் சென்று, முதல்வர் சித்தராமையாவை சந்தித்தார். சில விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்புகள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தின.

ஸ்ரீராமுலு கூறுகையில், ''டிசம்பர் 7ல், என் மகளின் திருமணம் நடக்கிறது. பெங்களூரின், அரண்மனை மைதானத்தில் திருமண நிகழ்ச்சிகள் நடக்கின்றன. என் மகளின் திருமணத்துக்கு அழைப்புவிடுக்க, முதல்வர், துணை முதல்வர் ஆகியோரை சந்தித்தேன். எங்களின் சந்திப்பில், அரசியல் குறித்து பேசவில்லை,'' என்றார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement