விமான பணிப்பெண்ணிடம் சில்மிஷம் செய்த பயணி கைது
பெங்களூரு: ஜெய்ப்பூரில் இருந்து பெங்களூரு வந்த 'இண்டிகோ' விமான பணிப்பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட பயணி கைது செய்யப்பட்டார்.
ராஜஸ்தான் மாநிலம், சிகார் மாவட்டத்தை சேர்ந்த ரந்தீர் சிங், 33, கடந்த 19ம் தேதி ஜெய்ப்பூரில் இருந்து பெங்களூரு சர்வதேச விமான நிலையத்துக்கு 'இண்டிகோ' நிறுவனத்தின் '6இ 556' என்ற விமானத்தில் பயணம் செய்தார்.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், பணிப்பெண்ணின் கைகளை பிடித்து இழுத்து தொந்தரவு செய்து கொண்டே இருந்தார்.
இதை கவனித்த பல பயணியர், மற்ற விமான ஊழியர்களிடம் தெரிவித்தனர். அவர்கள், விமான கேப்டனிடம் முறையிட்டனர்.
இதையடுத்து, பெங்களூரு விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும், விமான நிலைய போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, ரந்தீர் சிங் கைது செய்யப்பட்டார். பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். குடிபோதையில் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டது தெரியவந்தது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!