ஓ.எஸ்.மணியன் வெற்றியை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு
சென்னை : நாகை மாவட்டம் வேதாரண்யம் சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., வெற்றியை எதிர்த்த வழக்கின் உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.
கடந்த, 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில், வேதாரண்யம் தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் ஓ.எஸ்.மணியன்; தி.மு.க., சார்பில் வேதரத்னம் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இவரது வெற்றியை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் தி.மு.க., வேட்பாளர் வேதரத்னம் வழக்கு தொடர்ந்தார்.
மனுவில், 'தொகுதி முழுவதும், அ.தி.மு.க., தரப்பில் 60 கோடி ரூபாய் அளவுக்கு பணம் பட்டுவாடா செய்ததோடு, பொய்யான வாக்குறுதி அளித்தனர்' என்று கூறப்பட்டது.
இந்த தேர்தல் வழக்கை, நீதிபதி தண்டபாணி விசாரித்தார். வாதங்கள் முடிந்த நிலையில், வழக்கின் உத்தரவை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளி வைத்தார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!