Load Image
Advertisement

பழனிசாமியோட சேர்வதை விட விஷம் குடிப்பதே மேல்

 It is better to drink poison than join Palanisamy    பழனிசாமியோட சேர்வதை விட விஷம் குடிப்பதே மேல்
ADVERTISEMENT
மதுரை : ''விஷத்தை வாங்கி குடித்தாலும் குடிப்போம்; பழனிசாமி பின்னால் நாங்கள் எப்போதும் போக மாட்டோம்,'' என, பன்னீர்செல்வம் ஆதரவாளரும், 'நமது தொண்டன்' பத்திரிகை ஆசிரியருமான மருது அழகுராஜ் கூறினார்.

மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: ஒரு நீதிமன்ற தீர்ப்பை வைத்துக் கொண்டு கட்சியை, தன் கைக்குள் கொண்டு வந்து விட்டதாக முன்னாள் முதல்வர் பழனிசாமி நினைத்துக் கொண்டிருக்கிறார்.

தேவர் ஜெயந்திக்காக பசும்பொன்னுக்கு பயந்தபடியேதான் வருகை தந்தார். ஆனால், வெளியில் வந்து வீரமாக பேசினார். ஆனால், பன்னீர்செல்வத்துக்கு அப்படியில்லை. அவர் சென்ற இடமெல்லாம் சிறப்பு தான்.

பழனிசாமி சம்பந்தி மீது, 4,800 கோடி ரூபாய் ஊழல் வழக்க உள்ளது. அந்த வழக்கு சி.பி.ஐ.,-க்கு அனுப்பப்பட்டது. உச்ச நீதிமன்றம் வாயிலாக தமிழக அரசு, அதை மீண்டும் விசாரணைக்காக பெற்றது. ஆனால், விசாரிக்காமல் அந்த வழக்கை கிடப்பில் போட்டுள்ளனர்.

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வழக்கை நடத்த கவர்னர் கையெழுத்திட்டதை வரவேற்கிறோம்.

வரும், 2024 தேர்தலுக்கு பின் பழனிசாமி இல்லாத அ.தி.மு.க., உருவாகும். விஷத்தை வாங்கி குடித்தாலும் குடிப்போமே தவிர, பழனிசாமி பின்னால் நாங்கள் எப்போதும் போக மாட்டோம். பழனிசாமி தரப்பினர் பன்னீர்செல்வம் குறித்து தரம் தாழ்ந்து பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (3)

  • Nalla - Singapore,சிங்கப்பூர்

    ஹரிக்கு பின்னல்,ரேஷன் கடையில்

  • Hari - chennai,இந்தியா

    இப்போது வைகோ, ராமதாஸ், திருமா, விஜயகாந்த், வாசன், கிருஷ்ணசாமி, போன்றோர்களின் வரிசையின் பின்னால் எடப்பாடி பழனி, பன்னீர்செல்வம் , சீமான் ,கமல் ஆகியோர் வரிசையில் நிற்கின்றனர்.

  • Kumar - melbourne,ஆஸ்திரேலியா

    நோ ப்ரோப்லேம் நீங்க நஞ்சு சாப்பிடலாம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement