Load Image
Advertisement

நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறை 25ல் திருக்குறள் ஒப்புவித்தல், தமிழ் மரபு நடன போட்டி



தங்கவயல்: தங்கவயல் நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறை சார்பில், வரும் 25ம் தேதி, திருக்குறள் ஒப்புவித்தல், தமிழ் மரபு நடன போட்டி நடத்தப்படுகின்றன.

இதுதொடர்பாக பாசறை தலைவர் ஜெயசீலன், பொது செயலர் பிரதாப் குமார் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:

தங்கவயல் நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறை சார்பில், ராபர்ட்சன்பேட்டை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சாலையில் உள்ள மொய்து மஹால் அரங்கில், திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் தமிழ் மரபு நடன போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் 25ம் தேதி காலை 9:30 மணிக்கு குத்துவிளக்கு ஏற்றுகிறார். ஆளுங்குழுவின் சம்பத் வரவேற்கிறார். நாம் தமிழர் கலை குழுவின் ஹெலென் பிரியா வரவேற்பு நடனம் ஆடுகிறார்.

டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானி டில்லிபாபு, பி.ஜி.எம்.எல்., முன்னாள் தலைமை பொறியாளர் வின்சென்ட் ஆபிரகாம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.

தங்கவயல் தமிழ்ச்சங்கத் தலைவர் கலையரசன், கர்நாடகா தமிழ் மொழி சிறுபான்மையினர் நல பேரவை பிரான்சிஸ் போர்ஜியோ, தங்கவயல் தமிழர் கூட்டமைப்பு தலைவர் பால் வேளாங்கண்ணி, வீரமாமுனிவர் கலை குழு ஆனந்த்ராஜ், உலக தமிழ் கழக தலைவர் இளங்கதிரவன், பி.இ.எம்.எல்., தமிழ் மன்ற தலைவர் கார்த்திகேய ஆதித்யன், 'பி' வட்டம் தமிழ்மன்றத் தலைவர் அலெக்சாண்டர் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.

தமிழ் மாணவ - மாணவியர் 250க்கும் மேற்பட்டோர் மரபு நடன போட்டியில் பங்கேற்று, தங்கள் திறமையை வெளிப்படுத்த உள்ளனர். ஒருங்கிணைப்பாளர் அகஸ்டின் நன்றி கூறுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement