ADVERTISEMENT
தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி பேட்டி:
லோக்சபா தேர்தலுக்கு தயராகும் வகையில், வரும் 25, 26ம் தேதிகளில், திருநெல்வேலி, கன்னியாகுமரி லோக்சபா தொகுதிகளுக்கான பூத் கமிட்டி பயிற்சி பாசறை கூட்டம் நடக்கஉள்ளது. டிச., 6ல் தர்மபுரி தொகுதியிலும், 10ல் ஈரோடு தொகுதியிலும் நடக்கவுள்ளது.
கவர்னர் ரவி, எவ்வளவு தோல்வி அடைந்தாலும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்கிறார். மறைந்த சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்காமல் விட்டதற்கு கவர்னர் தலைகுனிய வேண்டும்.
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் பிளவு ஏற்பட்டிருப்பது என்பது கற்பனையானது. அவர்கள் முடிவு செய்து நடத்தக்கூடிய ஒரு நாடகம்.
எந்த வகையில் கருத்து வேறுபாடு இருக்கிறது என, அ.தி.மு.க., காரணம் சொல்லியே ஆக வேண்டும். ஆனால், எதுவும் சொல்லாமல், நேற்று வரை கூடலில் இருந்த நாங்கள் இன்று பிரிந்துள்ளோம் என, கூறுவது, தவறான கதை, வசனம் எழுதப்பட்ட ஒரு நாடகம். இதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டர். இவ்வாறு அழகிரி கூறினார்.

காமெடி பீஸ்