Load Image
Advertisement

பச்சை பாக்கெட் பால் நிறுத்தம்: அண்ணாமலை கண்டனம்

Green packet milk ban: Annamalai condemned    பச்சை பாக்கெட் பால் நிறுத்தம்: அண்ணாமலை கண்டனம்
ADVERTISEMENT
சென்னை: ஆவின் பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்த முடிவெடுத்திருப்பது, மக்களை ஏமாற்றும் செயல்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:



சென்னையில், 14.75 லட்சம் லிட்டர் விற்பனையாகும் ஆவின் பாலில், 40 சதவீத பங்குள்ள, 4.5 சதவீதம் கொழுப்பு சத்துள்ள பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்தி விட்டு, 3.5 சதவீத கொழுப்பு சத்துள்ள ஊதா நிற பாக்கெட் பால் விற்பனையை செய்ய முடிவெடுத்திருப்பது, மக்களை ஏமாற்றும் செயல்.

ஏற்கனவே, 6 சதவீத கொழுப்பு சத்து இருக்க வேண்டிய ஆரஞ்சு நிற பாக்கெட் பாலில், 4.79 சதவீதம் கொழுப்பு சத்துதான் உள்ளதாக, உணவு பாதுகாப்பு ஆணையம் அங்கீகரித்த பரிசோதனை கூட்டத்தில், தமிழக பா.ஜ., மேற்கொண்ட ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது.

இந்த சோதனை அறிக்கையை, அமைச்சரின் பரிசீலனைக்காக இணைத்திருக்கிறோம். இவ்வாறு, கொழுப்பு சத்துக்களை குறைத்து, ஆவின் நிறுவனத்தின் பாலை நம்பி இருக்கும் குழந்தைகளின் வளர்ச்சியில் வேண்டுமென்று விளையாடுகிறது, ஊழல் தி.மு.க., அரசு.

மேலும், பாலில் கொழுப்பு சத்தை குறைத்து விட்டு, விலையை குறைக்காமல் தொடர்ந்து பொது மக்களை மோசடி செய்து வருவதை. தி.மு.க., அரசு நிறுத்த வேண்டும். பொது மக்கள் கொடுக்கும் விலைக்கு, தரமான ஆவின் பாலை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


வாசகர் கருத்து (22)

  • MADHAVAN - Karur,இந்தியா

    நானொற்றி அம்பதுக்கு சிலிண்டர் குடுப்பேன் னு சொல்லும்போதே தெரிய வேண்டாமா ? நம்மள எப்படி ஏமாத்தி வசுருக்கனுங்க இந்த பீ சப்பி கட்சஜிகரனுங்க னு,

  • MADHAVAN - Karur,இந்தியா

    ஒரு சிலிண்டரின் விலை இல் முன்னூற்றி அறுபது ருபாய் மத்திய அரசுக்கு வரியா போகுது, மாநில அரசுக்கு தொன்னூறு ருபாய் வரியா போகுது, இது போதுமா ? இப்போ சொல்லுங்க அண்ணாமலை,நீங்க எப்போ விலை குறைக்கப்போறிங்க ?

  • Anand - chennai,இந்தியா

    தீயசக்தி திருட்டு திராவிட மாடல், மக்களை எல்லாவற்றிலும் கொடுமை படுத்தி சுகம் காணும்....

  • raja - Cotonou,பெனின்

    இங்கே வாழ்வாதாரத்துக்கு விவசாயிகள் போராட்டம்... அங்கே திராவிட மாடல் ஆட்சியாளர்கள் சந்தோசத்தில் பாட்டு பாடி கொண்டாட்டம்.... இந்த விடியல் தான் வேண்டும் என்றாயா தமிழா...

  • Narayanan - chennai,இந்தியா

    நாட்டை ஆளத்தெரியாதவர்களிடம் கொடுத்துவிட்டு இப்போது அல்லாடுகிறோம் .

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement