கோபாலபுரத்தில் கால்நடை மருத்துவ முகாம்
ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை ஒன்றியம், பாலாபுரம் கால்நடை மருத்துவமனை மற்றும் விடியங்காடு கால்நடை மருத்துவமனைகளுக்கு உட்பட்ட கதனநகரம், கோபாலபுரம் கிராமங்களில் நேற்று கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
திருதத்ணி கோட்ட கால்நடை மருத்துவ உதவி இயக்குனர் தாமோதரன் தலைமையிலான மருத்துவ குழுவினர், சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் மேற்கொண்டனர். கதனநகரம் ஊராட்சி மன்ற தலைவர் விஜயன் பங்கேற்றார். முகாமில், கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், தடுப்பூசி, நோய் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டன.
மேலும், காளை கன்றுகளுக்கு பேரணி நடத்தி, சிறந்த கன்றுகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. கால்நடைகளை சிறப்பாக பராமரிக்கும் விவசாயிகளுக்கு சான்று மற்றும் பரிசு வழங்கப்பட்டது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!