ரேஷன் கடை ஊழியர் விபத்தில் உயிரிழப்பு
கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டை அடுத்த எருக்குவாய் அருகே மணலி கிராமத்தில் வசித்தவர் பிரியங்கா, 29. தேர்வாய் அடுத்த கரடிபுத்துார் ரேஷன் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை வேலை முடிந்து டூ-- வீலரில் வீடு சென்றுக்கொண்டிருந்தார்.
கவரைப்பேட்டை - சத்தியவேடு சாலையில், பூவலம்பேடு திடீர் நகர் அருகே சென்றபோது, சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோதி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். ஆபத்தான நிலையில் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!