மாவா விற்ற பெண் கைது
புளியந்தோப்பு: புளியந்தோப்பு, காந்தி நகர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது, அதே பகுதியை சேர்ந்த ஸ்ருதி, 33 என்பவர் மாவா பாக்கெட்களை விற்றுக் கொண்டிருந்தார். போலீசாரை கண்டதும், ஸ்ருதி தப்பி ஓடினார்.
விசாரணையில், ஸ்ருதியின் உறவினர் ஆகாஷ், 20 வாங்கி வந்து ஸ்ருதியிடம் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, ஸ்ருதி, ஆகாஷ் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!