மன உளைச்சலால் தொழிலதிபர் தற்கொலை
புளியந்தோப்பு: ஸ்ட்ராஹன்ஸ் சாலை, கே.எல்.பி., அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர் புஷ்பக்,50. இவர் மெட்டல் வியாபாரம் செய்து வந்தார்.
கடந்த 15 நாட்களாக டெங்கு காய்ச்சலால் பாதித்து வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
நேற்று காலை மகன் வேலைக்கு சென்று விட, மனைவி கோவிலுக்கு சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத போது, வீட்டின் இருந்த ஜன்னல் வழியாக கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று சோதித்த போது, புஷ்பக் இறந்து விட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். உடல்நல பாதிப்பால், மனஉளைச்சல் ஏற்பட்டு புஷ்பக் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து புளியந்தோப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!