படுக்கை மெத்தையில் தீப்பற்றி முதியவர் பலி
தாம்பரம்: தாம்பரம் அடுத்த சேலையூரைச் சேர்ந்தவர் முனியன், 85; எலக்ட்ரீசியன். இவரது மனைவி விஜயலட்சுமி, 78. தனியாக வசித்து வந்தனர்.
சில நாட்களுக்கு முன், முனியனுக்கு கால்முறிவு ஏற்பட்டு, வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று முன்தினம், பீடி பிடிப்பதற்காக தீ குச்சியை பற்ற வைத்தார். அப்போது தீக்குச்சி, படுக்கை மெத்தையில் விழுந்து பற்றியது.
கால்முறிவு காரணமாக முனியனால் மெத்தையில் இருந்து தப்பிச்செல்ல முடியவில்லை. இதனால், மெத்தையுடன் சேர்ந்து அவரது இடுப்பு பகுதி எரிந்தது.
முனியனின் அலறல் சத்தம் கேட்டு வந்த அருகாமை வீட்டார், தீயை அணைத்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் முனியனை அனுமதித்தனர். அங்கு, பரிசோதனை செய்த மருத்துவர்கள், முனியன் இறந்ததாக தெரிவித்தனர். சேலையூர் போலீசார், முனியன் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!