Load Image
Advertisement

விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டம்: தீவிரத்தை குறைக்க அரசு முயற்சி

Farmers protest today: Govt tries to reduce intensity   விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டம்: தீவிரத்தை குறைக்க அரசு முயற்சி
ADVERTISEMENT
சென்னை: திருவண்ணாமலை, 'சிப்காட்' விரிவாக்கத்திற்கு எதிராக, விவசாயிகள் இன்று(நவ.,21) ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். அதன் தீவிரத்தை குறைக்கும் முயற்சியை அரசு துவக்கியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா கிராமத்தில், சிப்காட் விரிவாக்கத்திற்கு 1,200 ஏக்கரை கையகப்படுத்த அரசு தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிராக தொடர் போராட்டம் நடத்திய ஏழு விவசாயிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆறு பேர் மீதான குண்டர் சட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திய அருள் என்பவர் மீதான, குண்டர் சட்ட நடவடிக்கை விலக்கப்படவில்லை.

இதை கண்டித்தும், சிப்காட் விரிவாக்க திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், கலெக்டர், எஸ்.பி., ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், 24 மாவட்டங்களில் இன்று விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

இதற்காக, 100க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இணைந்து, விவசாயிகள் போராட்ட குழுவை உருவாக்கி உள்ளன. இந்த போராட்ட குழு சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

இதில், சமூக ஆர்வலர்கள், திரையுலகை சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, ஆர்ப்பாட்டத்தின் தீவிரத்தை குறைக்க அரசு தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர், விவசாய சங்க நிர்வாகிகளை அழைத்து சமரசம் பேசி வருகின்றனர். அத்துடன், வரும், 29ம் தேதி சென்னையில் நடக்க உள்ள உண்ணாவிரத போராட்டத்தை தடுக்கவும், அரசு தரப்பில் தீவிர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.


வாசகர் கருத்து (6)

  • பைரவர் சம்பத் குமார் -

    1). நமக்கு சாப்பாடு போடும் ஒரு விவசாயி தன் நிலம் மற்றும் தன் வாழ்வாதாரத்தை காபாற்ற போராடினால் குண்டர் தடுப்பு சட்டம் போடுகிறார்கள்.2). வருடம் 365 நாட்களும் ஒய்வு இல்லாமல் சுக துக்கங்களை பார்க்காமல் நாம் வயிர் நிறைய சாப்பிட வியர்வை சிந்தி உழைக்கிறான்.3). நமது குழந்தைகள் ஆரோக்கியமாக வளர படித்து நல்ல வேலைக்கு செல்ல தன் குடும்பம் தன் குழந்தைகளை அனைவரையும் லாபமில்லாத விவசாயத்தில் ஈடுபடுத்துகின்றான்.4). அவனுக்கு கடைசியாக கிடைப்பது குண்டர் தடுப்பு சட்டம் மற்றும் கையில் திருவோடு மட்டும்தான்.5). நாட்டில் விவசாயம் கொஞ்சம் கொஞ்சமாக மடிந்து வருகிறது.6). விவசாயி நமக்காக தான் போராடுகிறான். 7). காலம்காலமாக விவசாயிகளை வாழவிடுவது இல்லை.8). விவசாயிகளை சிறையில் தள்ள நினைப்பவன் ஒரு கொடுங்கோலனாகதான் இருக்க முடியும்.அவனுக்கு கடவுள் மன்னிப்பு வழங்கமாட்டார். 9). விவசாயிகள் ஒன்றுபட வேண்டும். 10). இனிமேல் திமுகவிற்கு ஒட்டு போட கூடாது என சபதம் எடுப்போம்.

  • duruvasar - indraprastham,இந்தியா

    அப்படியே போராட்டம் செய்தாலும் எந்த ஊடகமும் ஊடகவியலாளர்களும் கண்டுக்கொள்ள போவதில்லை. அந்த தைரியத்தித்தில்தான் திராவிட மாடல் அரசு தங்கள் காய்களை நகர்த்தி வருகிறது. ஒரு வருடத்திற்க்குமேல் போராடும் பரந்தூர் ஊர் மக்களைப் பற்றி யாராவது பேசுகிறார்களா ? போராளிகள், திரையுலக நட்சத்திரங்கள், சமூக ஆர்வலர்கள், சுற்று சூழல் ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஒருசேர எல்லோர் வாயிலும் ஒரே நேரத்தில் தீராத புண் வேறு வந்துவிட்டது. 15+10 தோலர்கள் 25+ 20 க்கு பேரம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். தோழமை சுட்டுகாரிடமிருந்த சரக்கும் மிடுக்கும் அடகு கடைக்கு போய் பல் வருடங்கள் ஆகிவிட்டன. கலிங்கப்பட்டி யாருக்கு மகனுக்கு முடிசூட்டு விழா நிகழ்ச்சிக்கு அலைந்து கொண்டிருக்கிறார். டெல்டா காரனுக்கே விவசாயிகள் மேல் அக்கறையில்லை.

  • R. Vidya Sagar - Chennai,இந்தியா

    முற்பகல் செயின் . . . . .

  • அருண் குமார் - ,

    விடியல் அரசு எதிர் கட்சியா இருந்தா மட்டும் திட்டங்கள் எதிர்க்க படும்

  • Maha -

    Same issue at kalpattu...near red hills and the DRO was rude more than 700 acres of agric land is under acquisition and 50 plus houses of villagers too in trouble due to TIDCO

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்