ஏரியில் மூழ்கி மூதாட்டி பலி
கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டை அடுத்த பெருவாயல் கிராமத்தில் வசித்தவர் சுப்பிரமணி மனைவி வசந்தா, 70. நேற்று முன்தினம் இரவு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. நேற்று காலை பார்த்தபோது, அருகில் உள்ள ஏரியில் பிணமாக கிடந்தார்.
ஏரிக்கரை ஓரம் நடந்து சென்றவர், தடுமாறி விழந்து ஏரி நீரில் மூழ்கி இறந்ததாக கூறப்படுகிறது. கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!