ADVERTISEMENT
திருவேற்காடு: கொலை வழக்கில் கைதாகி சிறை சென்றவர், ஜாமினில் விடுதலையாகி, குடும்ப பிரச்னையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை திருவேற்காடு, சின்ன கோலடி, மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் குமார், 55. அவர், முன் விரோதம் காரணமாக, கடந்த ஜனவரி மாதம், கோயம்பேடில் ஒருவரை கொலை செய்த வழக்கில் கைதாகி, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த, 11ம் தேதி, ஜாமினில் விடுதலையானார். வீட்டிற்கு சென்ற போது, அவரது மனைவி உஷாராணி, 46, அமைந்தகரையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்தது. அங்கு சென்று அவரை சந்தித்து, வீட்டிற்கு அழைத்தார்.
அவர் வர மறுத்தார். அதனால், குமார் சில நாட்களாக, மனமுடைந்து காணப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவேற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!