Load Image
Advertisement

உலக முதலீட்டாளர் மாநாட்டிற்காக சென்னையை அழகாக்கும் மாநகராட்சி



சென்னை: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முன்னிட்டு, சென்னையை அழகுப்படுத்தும் பணியில் மாநகராட்சி, நெடுஞ்சாலை துறை, மெட்ரோ ரயில் நிர்வாகம் இணைந்து ஈடுபட்டுள்ளன.

தமிழக அரசு, பல்வேறு தொழில் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க, சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், 2024 ஜன., 7, 8ல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துகிறது.

அதில் பங்கேற்க அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள், தொழில் நிறுனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், துாதர்கள் வர உள்ளனர்.

எனவே, சென்னை மாநகர் முழுதும் சாலைகளில் சீரமைப்பு மேற்கொள்வது, முக்கிய சந்திப்புகளில் பாரம்பரிய கலை சின்ன ஓவியங்களை வரைவது என, மாநகரை அழகுப்படுத்தும் பணியில் சென்னை மாநகராட்சி, தேசிய நெடுஞ்சாலை துறை, மெட்ரோ ரயில் நிர்வாகம் இணைந்து ஈடுபட்டுள்ளன.

இதுகுறித்து, அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

தற்போது, சென்னையில் முக்கிய சாலைகளில் மெட்ரோ ரயில் விரிவாக்க திட்ட பணிகள் நடந்து வருகின்றன. அந்த பணி நடக்கும் இடங்களில், 'பேரிகார்டு' எனப்படும் தடுப்பு போடப்பட்டு உள்ளது.

நந்தம்பாக்கத்தில் நடக்கும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க வருவோர், சென்னையின் பல்வேறு இடங்களில் உள்ள நட்சத்திர விடுதிகளில் தங்குவர். சுற்றுலாதலங்களுக்கு செல்வர்

இதனால், விமான நிலையத்தில் இருந்து நந்தம்பாக்கம் வரை மட்டுமின்றி, சென்னை முழுதும் சாலையை சீரமைப்பது, மெட்ரோ ரயில் வேலை நடக்கும் இடங்களில் பேரிகார்டையே கண் கவரும் வகையில் மாற்றம் செய்வது, அவசியம் இல்லாத இடிபாடுகளை அகற்கும் பணி மேற்கொள்ளப்படும்.

மாநாட்டில் பங்கேற்போர், சென்னை அருகில் உள்ள மாமல்லபுரம், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வாய்ப்புள்ளது. அந்த இடங்களிலும் அழகுப்படுத்தும் பணி செய்யப்படும்.

உள்கட்டமைப்பு மேம்படுத்தும் பணி, சென்னை மாநகராட்சி ஆணையர், நெடுஞ்சாலை துறை செயலர், மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குனர் ஆகியோர் மேற்பார்வையில் நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement