Load Image
Advertisement

மனைவியை கத்தியால் குத்திய கணவன் கைது

 Husband arrested for stabbing wife    மனைவியை கத்தியால்  குத்திய கணவன் கைது
ADVERTISEMENT


ஆர்.கே.பேட்டை,: திருவள்ளூர் மாவட்டம், அத்திமாஞ்சேரிபேட்டை அடுத்த கோணசமுத்திரம் இந்திரா நகரை சேர்ந்தவர் பழனி, 54. இவரது மனைவி நாகபூஷ்ணம், 42. ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

பழனிக்கும், நாகபுஷ்ணத்திற்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு, 15 ஆண்டுகளுக்கு முன் பிரித்து வாழ்ந்து வருகின்றனர்.

நாகபூஷ்ணம் தன் தாய் வீடான கோசராபள்ளி கிராமத்தில் தங்கி ஆர்.கே.பேட்டை- சோளிங்கர் சாலையில் டெய்லர் கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை குடிபோதையில், பழனி ஆர்.கே.பேட்டைக்கு வந்து மனைவி கடைக்கு சென்றார்.

அங்கு கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது பழனி தான் வைத்திருந்த காய்கறி வெட்டும் கத்தியால் நாகபூஷ்ணத்தின் இடது கையில் குத்திவிட்டு தப்பி ஓடினார். அப்போது அங்கிருந்து ஆட்டோ டிரைவர்கள் பழனிக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

காயமடைந்த நாகபூஷ்ணத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்கு பதிந்து பழனியை கைது செய்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement