Load Image
Advertisement

நூலகம் பயன்பாட்டிற்கு வருமா?

Will the library come in handy?   நூலகம் பயன்பாட்டிற்கு வருமா?
ADVERTISEMENT
திருவாலங்காடு ஒன்றியம், சின்னமண்டலி ஊராட்சியில் அரசு பள்ளி அருகே அமைந்துள்ளது கிளை நுாலகம். இந்த நுாலகம், 2007 - -08ம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 2.75 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது.

இந்த நுாலக கட்டடம் கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்படாமல் பழுதடைந்து இருந்ததால் நுாலகம் பயன்பாடின்றி இருந்தது இதனால் 70க்கும் மேற்பட்ட வாசகர்கள் மற்றும் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் என 100க்கும் மேற்பட்டோர் ஏமாற்றமடைந்து இருந்தனர்.

இந்நிலையில் மீண்டும் நுாலகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வாசகர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.இதையடுத்து அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 2022 -- 23ம் ஆண்டு 1 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டது. கட்டடம் சீரமைக்கப்பட்டு, ஐந்து மாதங்கள் ஆகும் நிலையில் இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை. நுாலக கட்டடத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- வாசகர்கள், சின்னமண்டலி.

போஸ்டர் ஒட்டும் இடமாகும் நிழற்குடை

திருவாலங்காடு ஒன்றியம் பெரியகளக்காட்டூர் கிராமத்தில் தக்கோலம் மாநில நெடுஞ்சாலையில் பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டு உள்ளது.

பயணியர் மழை வெயிலில் இருந்து பாதுகாப்பாக நின்று பயணம் செய்ய அமைக்கப்பட்ட பேருந்து நிழற்குடை தற்போது போஸ்டர் ஒட்டும் இடமாக மாறி உள்ளது. எனவே பேருந்து நிழற்குடையை போஸ்டரை ஒட்டி அசுத்தம் செய்பவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கே.வேதாச்சலம், பெரியகளக்காட்டூர்.

குடியிருப்பு சாலையை சீரமைக்க வேண்டும்

கும்மிடிப்பூண்டி அருகே பெரிய ஓபுளாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட துராபள்ளம் பகுதியில், ராகவேந்திரா டாக்டர் சிட்டி குடியிருப்பு பகுதி உள்ளது. அங்கு, 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த குடியிருப்பின் பிரதான சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், குடியிருப்புவாசிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் அந்த சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கி.அஸ்வதா, துராபள்ளம்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement