ADVERTISEMENT
ஊத்துக்கோட்டை,: ஊத்துக்கோட்டை தாலுகாவில், 100 வருவாய் கிராமங்கள் உள்ளன. இதில், 119 ரேஷன்களில், 46,783 குடும்ப அட்டைகள் உள்ளன.
இந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஒவ்வொரு பொங்கல் விழாவிற்கும் ஒரு குடும்ப அட்டைதாரருக்கு, ஒரு புடவை, ஒரு வேட்டி இலவசமாக வழங்கப்படும். வரும் ஜனவரி மாதம் பொங்கல் விழா வரவுள்ளது.
ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டிய துணிகள் முதற்கட்டமாக வந்துள்ளன.
இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தாலுகாவில் உள்ள, 46,783 குடும்ப அட்டைதாரர்களில், 12,500 வேட்டி மற்றும் சேலைகள் வந்துள்ளது. இரண்டாம் கட்டமாக மீதமுள்ள வேட்டி, சேலை வரும். முழுதும் வந்த பின், அரசு தெரிவிக்கும் நாளில், ஒவ்வொரு ரேஷன்கடை வாயிலாக வேட்டி, சேலை வழங்கும் பணி துவங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!