ADVERTISEMENT
திருத்தணி: திருத்தணி நகராட்சி அனுமந்தாபுரம் பகுதியில் 50 அடி ஆழமுள்ள தரைக்கிணற்றில் தண்ணீர் நிரம்பி உள்ளது. இந்த கிணற்றில் இரு நாட்களுக்கு முன் பசு மாடு ஒன்று தவறி விழுந்தது.
நேற்று அவ்வழியாக சென்றவர்கள் கிணற்றில் மாடு கத்தும் சத்தம் கேட்டதை அறிந்து கிணற்றின் அருகே சென்று பார்த்த போது, பசு மாடு ஒன்று தண்ணீரில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.இதையடுத்து அவர்கள் திருத்தணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பசு மாட்டை உயிருடன் மீட்டனர்.பின் உரிமையாளரிடம் பசுமாட்டை ஒப்படைத்தனர்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!