மாற்றுத்திறனாளிகளுக்கு 29ல் அடையாள அட்டை
திருவள்ளூர்: ஆவடி அரசு மருத்துவமனையில் 29ல் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்படும்.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு, நாளை 22ம் தேதி ஆவடி அரசு மருத்துவமனையில் மருத்துவச் சான்று மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில், நிர்வாக காரணங்களுக்காக, இம்முகாம் வரும், 29ம் தேதி நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!