சுகாதார சீர்கேடு கண்டித்து ஆர்ப்பாட்டம்
பொன்னேரி, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு, தினமும், 800 - 1,100 புறநோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். மகப்பேறு பிரிவில், ஒரு மாதத்திற்கு, 70 - 90 பேர் மகப்பேறு பெறுகின்றனர். உள்நோயாளிகளாக, தினமும், 80 - 100 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
அவசர சிகிச்சை பிரிவிலும், விபத்துகளில் சிக்குபவர்கள், தற்கொலை முயற்சி, மாரடைப்பு என, தினமும், 50க்கும் மேற்பட்டோர் அவசர சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.
பொன்னேரியை சுற்றியுள்ள, 300க்கும் அதிகமான கிராங்களின் நோய் தீர்க்கும் சிகிச்சை மையமாக உள்ள இங்கு, பல்வேறு சுகதார சீர்கேடுகள் உள்ளதாக கூறி, நேற்று பொன்னேரியை சேர்ந்த, சமூக ஆர்வலர்கள், கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
அ.தி.மு.க.,வை சேர்ந்த நகராட்சி துணைத்தலைவர் விஜயகுமார் தலைமையில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!