Load Image
Advertisement

விஜயகாந்த் உடல் நலம்: மாறுபட்ட தகவலால் குழப்பம்

Vijayakanths health: Confused by conflicting information   விஜயகாந்த் உடல் நலம்: மாறுபட்ட தகவலால் குழப்பம்
ADVERTISEMENT
சென்னை: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், 71, இம்மாதம், 18ம் தேதி இரவு, சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சளி, மூச்சுத் திணறல் பாதிப்பு உள்ளதாக கூறப்பட்டது. செயற்கை சுவாச கருவி உதவியுடன், தீவிர சிகிச்சை பிரிவில், அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தே.மு.தி.க., தலைமை நேற்று வெளியிட்ட அறிக்கை:



விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றுள்ளார்; ஓரிரு நாளில் வீடு திரும்புவார். செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக தவறான செய்திகளை வெளியிடும், 'டிவி'யை பார்த்து, யாரும் நம்ப வேண்டாம். அது, முற்றிலும் தவறானது. இதுபோன்ற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், விஜயகாந்த் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு நலமுடன் உள்ளதாக, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

தனியார் மருத்துவமனை டாக்டர்களிடம், விஜயகாந்த் உடல்நிலை குறித்து கேட்டு வருகிறேன். அவருக்கு ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதால், அதற்குரிய டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தாலும், விஜயகாந்த் நலமுடன் உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (5)

  • vijay, covai -

    nalla manidhar

  • Narayanan - chennai,இந்தியா

    மாசு

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    மாத்தி மாத்தி கூறி மக்களை குழப்பாதீங்க..

  • duruvasar - indraprastham,இந்தியா

    மாசு படாமல் இருக்கவேண்டுமெனில் தீவிர சிகிச்சை பிரிவில் தான் இருக்கவேண்டும். மாசு பட்டால் தொற்று ஏற்படும்.

    • jss - ,

      correct

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்