பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில், நாடு முழுதும் காளான்களை போல முளைத்து வரும் போட்டி தேர்வுகளுக்கான தனியார் பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனித உரிமை மீறல்
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ப்ரியா வாதிட்டதாவது: தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2020ம் ஆண்டு புள்ளிவிபரங்களின்படி, நாடு முழுதும் 8.2 சதவீத மாணவர்கள் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளனர்.
இதை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தனியார் பயிற்சி மையங்கள் இருப்பதை நாங்கள் ஆதரிக்கவில்லை. ஆனால், பள்ளிகளின் நிலையை நாம் கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது. போட்டி நிறைந்த இந்தசூழலில், பயிற்சி மையங்களுக்கு செல்வதை தவிர மாணவர்களுக்கு வேறுவாய்ப்புகள் இல்லை.
அரசை நாடுங்கள்
மாணவர்களின் இந்த நிலைக்கு பெற்றோர் தரும் அழுத்தமே காரணம். அவர்கள் தான் குழந்தைகள் மீது அளவுக்கு அதிகமான சுமையை சுமத்துகின்றனர். இதுபோன்ற சூழலில் நீதிமன்றம் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும். இந்த விவகாரம் தொடர்பாக அரசை வேண்டுமானால் மனுதாரர் நாடலாம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வாசகர் கருத்து (18)
நாட்டில் அநேக பெற்றோர் தங்கள் பிள்ளைகள் மருத்துவராக வேண்டும் என்று நினைக்கின்றனர். எல்லோருமே மருத்துவர் படிக்க ஆசைப்பட்டால் கம்பௌண்டர் வேலைக்கு யார்தான் வருவார்கள். கல்வி என்பது அறிவை வளர்த்துக்கொள்ள என்ற நிலை மாறி தற்பொழுது அது பணம் சம்பாதிக்க என மாற்றி ரொம்ப காலம் ஆகி விட்டது. அதனால்தான் பிரச்னையே. பணம் சம்பாதிக்க எத்தனையோ படிப்புகள் உள்ளது. இந்தியா ஒரு விவசாய நாடு. விவசாயம் சம்பந்தமாக நிறைய படிப்புகள் உள்ளன. விவசாய சார்ந்த பொருட்களை புதிய முறையில் உற்பத்தி செய்ய நிறைய தழிழ் படிப்புகளும் உள்ளன. அவைகளையும் தேர்ந்தெடுக்கலாம். மக்களிடம் இந்த மருத்துவ படிப்பு மோகம் குறைய வேண்டும். அரசியல் கட்சிகளும் இதை வைத்துக்கொண்டு உருட்டுவதும் குறையும்
அனிதா நீலசாயம் வெளுத்து போயிடுச்சி. அந்த நீட் ரத்து ரகசியம் ரகசியமாகவே பாதுகாக்கப்படுகிறது. கோர்ட் தலையிட்டுத்தான் அந்த ரகசியத்தை வெளிகொணர முடியும் என தோன்றுகிறது.
அரசியல் கட்சி தான் முக்கிய காரணம்.
அரசின் பணியை அரசு தான் செய்தாக வேண்டும். பின்பு அரசுக்கு என்ன வேலை? நீதிமன்றமே அரசாட்சி செய்யலாமே?
"ஆனால், பள்ளிகளின் நிலையை நாம் கவனத்தில் கொள்ள வேண்டி..." இதுக்கும் பெற்றோர் தான் காரணமா யுவெர் ஹானர்.... பள்ளி கல்வி துறையை கையில் வைத்திருக்கும் மாநில அரசுக்கு எந்த கண்டனமும் தண்டனையும் இல்லையா...