ADVERTISEMENT
தேனி: சிவன் கோயில்களில் கார்த்திகை மாத முதல் சோமவார பூஜை சிறப்பாக நடந்தது.
தேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் சிவபெருமானுக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது. இதனை தொடர்ந்து சிறப்பு பூஜை நடந்தது. மதுரை ரோடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
பூஜையில் பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. என்.ஆர்.டி., நகர் சிவகணேச கந்த பெருமான் கோயிலில் சிவன் சன்னதியில் 108 சங்காபிஷேகம் நடந்தது. சோமவார பூஜைகளில் திரளாக பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!